இயக்குனர் மணிவண்ணனின் கத்துக்குட்டியாக பணிபுரிந்தவர் தான் சுந்தர் சி. இப்பொழுது உள்ள நவீன தொழில்நுட்பம் இல்லாத அக்காலத்திலும் பல ஹிட்டான திரைப்படங்களை வழங்கியவர் தான் மணிவண்ணன். அவரிடம் இருந்தே இவர் காமெடி கலந்த நடிகர்களை உருவாக்குவதில் வல்லமை பெற்றார். அவர் தன் குருவாக இருப்பதை பெருமையாக பேசுவார் சுந்தர் சி. அதன்படி சுந்தர் சி படம் என்றாலே நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது.
மணிவண்ணனின் படங்களில் நடிகர் சத்யராஜ் நடிக்கும் போது அப்படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். அன்றிருந்தே சத்யராஜ் உடன் நல்ல உறவு வைத்திருந்தார். இவரும் இணைந்து குரு சிஷ்யன் போன்ற படங்களும் நடித்துள்ளனர். வீட்ல விசேஷம் பட நிகழ்ச்சியில் பேசும்போது அவர், சத்யராஜ் உடனான தனது உறவை பேசியிருப்பார்.
சுந்தர் சி சத்யராஜ் இடையேயான உறவு:
நாங்கள் இருவரும் இணைந்து ஒரு ப்ரிவியூ படத்திற்கு சென்றிருந்தோம். அந்தப் படத்தை எங்களால் பார்க்கவே முடியவில்லை. ப்ரிவ்யூ படம் என்பதால் வேறு வழி இன்றி பார்த்தோம். படத்தை முடிந்து வெளியே வந்த போது, படம் எப்படி உள்ளது என்று தயாரிப்பாளரும், இயக்குனரும் கேட்டனர். சத்யராஜ் சார் அவர்கள் மிக அற்புதமாக உள்ளது என்று சகஜமாக பேசி வந்தார்.
வெளியில் வந்தவுடன் நான் அவரிடம் கேட்டேன் ஏன் இவ்வாறு சொன்னீர்கள் என்று. அதற்கு அவர், படம் எடுக்கும் முன் கேட்டிருந்தால் கதை பற்றி சொல்லி இருக்கலாம். ஆனால் படம் எடுத்து அனைத்து வேலையும் முடித்து அடுத்த வாரம் ரிலீஸ் போது கேட்டால் என்ன சொல்வது என்றார். மேலும் அப்படம் தியேட்டரில் ஓடவில்லை என்றாலும் நம்மை யாரும் எதுவும் சொல்லப்போவதில்லை. இதே இது நாம் படம் நல்லா வில்லை என்று சொல்லியிருந்தால் அந்த நாரவாயன் அன்றே சொன்னான் என்றும், அவர் சொன்னதால் தான் படம் ஓடவில்லை என்றும் நம் மேல் குறை கூறி இருப்பார்கள் என்றார். நான் உண்மையிலேயே அவர் சொல்வதைக் கண்டு மிரண்டு விட்டேன். அவர்தான் என் குரு. மேலும் ஒரு நிகழ்வையும் ஷேர் செய்தார்.
நான் ப்ரோடுயூசர் ஆக அறிமுகமானபோது ஒரு பார்ட்டி நடந்தது. அதில் பிரபலங்கள் எல்லாரும் லைம் லைட் முன்னிலையில் பார்ட்டியை என்ஜாய் பண்ணிக் கொண்டிருந்தார்கள். ஆனால் தூரமாக சத்யராஜ், கே எஸ் ரவிக்குமார் இன்னும் சில பேர் லைம் லைட் பின்புறம் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில் ஒரு ஹீரோ மயக்கம் போட்டு விழுந்தார். அவரை அங்கிருந்த சிலர் தூக்கிக் கொண்டு சென்றனர். அதேபோல் மீண்டும் பார்ட்டி நடந்தது. பார்ட்டியில் அப்போதும் அவர்கள் லைம்லைட் பின்னால் நின்று கொண்டிருந்தனர். அப்போதும் ஒருவர் லைம் லைட்டினால் மயக்கம் போட்டு விழுந்தார். அப்போது தான் புரிந்தது லைம் லைட்டில் நின்று முடியாமல் போவதற்கு, பின்னால் நின்று விடலாம் என அவர்கள் அங்கு நின்று கொண்டிருந்தார்கள் என்றார்.