நேர்கொண்ட பார்வை திரைப்படம் எனக்கு மன அழுத்தத்தை கொடுத்தது!!நடிகை ஷ்ரத்தா!!

0
137
Neerkonda Pravi movie gave me stress!!Actress Shraddha!!
Neerkonda Pravi movie gave me stress!!Actress Shraddha!!

2016 ஆம் ஆண்டில் வெளியான கன்னட உளவியல் பரபரப்பூட்டும் திரைப்படமான யு டர்னில் இவரின் நடிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது. அதன் மூலம் 2017 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்து வியாபார, விமர்சன ரீதியிலும் வெற்றி பெற்ற விக்ரம் வேதா திரைப்படத்திலும் இவரின் நடிப்பு பாராட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று வரை பல திரைப்படங்கள் இவர் நடித்து வருகிறார்.

நேர்கொண்ட பார்வை திரைப்படம் குறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு இவர் அளித்த பேட்டி பின்வருமாறு :-

நேர்கொண்ட பார்வை படம் தொடங்கிய நேரம் அது. நான் அந்தப் படத்தில் கமிட் ஆன உடன் அந்தப்படத்தின் ஹிந்தி வெர்ஷனான பிங்க் படத்தை பார்த்தேன். அதில் டாப்ஸி வெளிப்படுத்தி இருந்த நடிப்பை பார்த்து, நான் அப்படியே ஷாக்காகி விட்டேன். அவர் அளவுக்கு என்னால் தமிழ் வெர்ஷனில் நடிக்க முடியுமா என்ற சந்தேகம் எனக்கு வந்துவிட்டது. இந்த சந்தேகம் எனக்கு ஒரு விதமான அழுத்தத்தை கொடுத்தது என தெரிவித்திருக்கிறார்.

மேலும், படத்தை அரைமணி நேரத்தில் அப்படியே நிறுத்திவிட்டு, என்னுடைய பாங்கில் அந்த கதாபாத்திரத்தை நடித்து பார்த்ததாகவும் பேட்டியில் தெரிவித்திருக்கிறார் நடிகை ஷிரத்தா அவர்கள்.

குறிப்பாக, கதாநாயகர்கள் பாதுகாக்ககூடிய கதாநாயகியாக நான் இருக்க விரும்ப வில்லை. என்னால் அவர்கள் கட்டமைத்து இருக்கும் சராசரியான பாக்சிற்குள் அடங்க முடியாது. நான் வலிமையான கதாபாத்திரங்களில் நடிக்கும் போது, நான் ஏதோ கற்பனை உலகத்தில் இருப்பது போல தோன்றும். காரணம் நான் நிஜ வாழ்க்கையில் அவ்வளவு வலிமையான பெண் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Previous articleரயில்வேயின் முக்கிய விதி!! பொது டிக்கட்டில் பயணிக்க இதை கண்டிப்பா செய்யணும்!!
Next articleஉணவு செரிமானம் ஆகாமல் அவதியா.. இதோ பெருஞ்சீரகத்தை இப்படி யூஸ் பண்ணுங்க!!