உங்கள் தலை முடி காடு போல் வளர எண்ணையை தலையில் வைப்பதற்கு முன் 1 முறை இதை செய்யுங்கள்!!

Photo of author

By Rupa

உங்கள் தலை முடி காடு போல் வளர எண்ணையை தலையில் வைப்பதற்கு முன் 1 முறை இதை செய்யுங்கள்!!

Rupa

Do this 1 time before putting the oil on your head to grow your hair like a forest!!

உடல்,தலை போன்றவற்றிற்கும் ஆயில் மசாஜ் செய்து வந்தால் பல நன்மைகள் கிடைக்கும்.தலைக்கு நல்லெண்ணெய் வைத்து குளிப்பதால் உடலில் சூடு தணிந்து குளிர்ச்சி நிலை உண்டாகும்.

ஆனால் குளிர்காலத்தில் எண்ணெய் மசாஜ் செய்வதை பலரும் தவிர்க்கின்றனர்.சைன்ஸ்,காய்ச்சல் போன்ற பாதிப்புகள் உண்டாகிவிடும் என்று அஞ்சி தலைக்கு நல்லெண்ணெய் வைப்பதை தவிர்த்துவிடுகின்றனர்.

ஆனால் நல்லெண்ணெயை சூடாக்கி தலையில் ஊற்றி மசாஜ் செய்து வந்தால் சருமம் சார்ந்த பாதிப்புகள் குணமாகும்.குளிர்காலத்தில் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சூடான எண்ணெயை பயன்படுத்தலாம்.

குளிர்காலத்தில் தலைமுடி வறண்டு போகாமல் இருக்க சூடான எண்ணையை தலைக்கு பயன்படுத்தலாம்.குளிர்காலத்தில் பலரும் சந்திக்கும் பிரச்சனை பொடுகு.இதை கட்டுப்படுத்த சூடான எண்ணெயை கொண்டு தலைக்கு மசாஜ் செய்யலாம்.

சூடான எண்ணெய் கொண்டு தலைக்கு மசாஜ் செய்வதால் இரத்த ஓட்டம் மேப்படும்.இதனால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.தலைக்கு சூடான எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும்.

தங்களுக்கு தேவையான அளவு நல்லெண்ணெய் எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஜட்ஸ் 30 செகண்ட் சூடுபடுத்தவும்.பிறகு இதை லேசான சூட்டில் இருக்கும் பொழுது தலைக்கு தடவி 15 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும்.

தங்களுக்கு உடல் வலி இருந்தால் இந்த சூடான எண்ணெயை வைத்து பாடி மசாஜ் செய்யலாம்.அதன் பிறகு வெது வெதுப்பான நீரில் தலைக்கு குளிக்க வேண்டும்.இவ்வாறு குளிர்காலத்தில் வாரத்திற்கு இருமுறை சூடான எண்ணெய் மசாஜ் செய்து குளித்து வந்தால் அனைத்துவித பாதிப்புகளும் சரியாகும்.நல்லெண்ணெய் வைக்க விரும்பாதவர்கள் தேங்காய் எண்ணெயை சூடுபடுத்தி பயன்படுத்தலாம்.