இவரால் தான் நான் அதிக படத்தில் நடிக்கவில்லை!! விஜயை காரணமாக கூறும் நடிகர் விக்ராந்த்!!

0
142
It's because of him that I don't act in more films!! Actor Vikrant blames Vijay!!
It's because of him that I don't act in more films!! Actor Vikrant blames Vijay!!

கற்க கசடற திரைப்படத்தின் மூலம் 2005 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் நடிகர் விக்ராந்த். இவர் நடிகர் விஜயினுடைய சித்தி பையன் அவர்.

இவர் முதன் முதலில் அழகன் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அதன் பின் தன்னுடைய படிப்பில் கவனம் செலுத்தி லயோலா கல்லூரியில் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்தவர், ஆர்வி உதயகுமாரின் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியான கற்க கசடற திரைப்படத்தில் மீண்டும் நடிக்க தொடங்கினார். இவர் கதாநாயகனாக மட்டுமின்றி தான் நடிக்கக்கூடிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் என்றும் கூறலாம்.

இவர் பேட்டி ஒன்று தான் ஏன் அதிக படங்களில் நடிக்கவில்லை என்றும் அதற்கு தன்னுடைய அண்ணனாகிய விஜய் தான் காரணம் என்றும் வெளிப்படையாக பேசியிருக்கிறார். அது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.

என்னிடம் கதை சொல்ல வருபவர்கள் அனைவரும் விஜய் அண்ணனை பற்றி மட்டுமே கேட்கின்றனர். கடந்த 5 , 6 வருடங்களாக மட்டும் தான் என்னிடம் யாரும் அவரைப் பற்றி கேட்பதில்லை. நான் விஜய் என்கின்ற மிகப்பெரிய நடிகருடைய தம்பி என்பதால் என்னிடம் வரும் அனைவருக்கும் போக்கஸ் அவரின் மீது மட்டுமே உள்ளது. என்னை வரும் இரண்டாம் பட்சமாகவே பார்க்கின்றனர் என்று தெரிவித்திருந்தார்.

மேலும், என்னிடம் கதை சொல்ல வருபவர்கள் அனைவரும், ” விஜய் சாரை படத்தில் ஒரு காட்சியில் மட்டும் வர சொல்லுங்கள், அவரை ஒரு டிவிட் மட்டும் போட சொல்லுங்கள், விஜய் அண்ணாவை ஒரு பாட்டில் மட்டும் தலையை காட்டி விடும்படி சொல்லுங்கள் ” என்று அவரைக் குறித்து ஏதாவது ஒன்றை கேட்டுக் கொண்டே இருக்கின்றனர்.

இதனால் நான் வேண்டாம் என ஒதுக்கிய படங்கள் அதிகம். ஆனால் இதுவரையில் இது குறித்து அண்ணாவிடம் சென்று நான் எதையும் கேட்டதும் இல்லை இதைப் பற்றி அவரிடம் கூறியதும் இல்லை என்று மனம் திறந்து தன்னுடைய திரை பயணத்திற்கு தடையாக இருப்பது இதுதான் என வெளிப்படையாக பேசியிருக்கிறார் நடிகர் விக்ராந்த்.

Previous articleபெஞ்சால் புயலின் தாக்கம் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை விடப்பட்ட பள்ளிகள்!!
Next articleகடுமையாக்கப்பட்ட சுற்றுலா விசா கொள்கை!! தவிக்கும் இந்தியர்கள்!!