மழை மற்றும் குளிர்காலங்களில் பெட்,துணிகளில் மூட்டைப் பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.பெட் கட்டிலில் மூட்டைப் பூச்சிகள் பதுங்கி இரவு நேரத்தில் நம் இரத்தத்தை உறிஞ்சி எடுக்கிறது.இதனால் அரிப்பு ஏற்படுவது தூக்கமும் தொலைகிறது.இந்த மூட்டைப்பூச்சி நடமாட்டத்தை கட்டுப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றலாம்.
TIPS 01:
பேக்கிங் சோடா
சமையலுக்கு பயன்படுத்தும் பேக்கிங் சோடாவை கொண்டு மூட்டைப் பூச்சிககுக்கு முடிவு கட்டலாம்.
முதலில் ஒரு பாக்கெட் பேக்கிங் சோடாவை எடுத்துக் கொள்ளுங்கள்.இதை பெட் கட்டில் மீது தூவிவிடுங்கள்.
இவ்வாறு செய்தால் மூட்டைப் பூச்சிகள் மயங்கி இறந்துவிடும்.பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து காட்டில் மீது ஊற்றி வெயிலில் நன்கு காயவிட்டால் மூட்டைப் பூச்சி தொல்லைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
TIPS 02:
கல் உப்பு
பெரிய பாத்திரம் ஒன்றில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு அடுப்பை அணைத்துவிட்டு ஒரு கைப்பிடி உப்பை அதில் கொட்டி கரையவிட வேண்டும்.
பிறகு இந்த நீரை பெட் காட்டில்,துணிகள் மீது ஊற்றினால் மூட்டைப்பூச்சி துடி துடித்து இறந்துவிடும்.
துணிகளை மூட்டைப்பூச்சி நடமாட்டம் இருந்தால் ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு பாக்கெட் சோடா உப்பு கலந்து துணிகளை ஊற வைக்கவேண்டும்.இவ்வாறு செய்தால் மூட்டைப்பூச்சிகள் அனைத்தும் வெளியேறிவிடும்.
TIPS 03:
வெள்ளை வினிகர்
பாத்திரம் ஒன்றில் தண்ணீர் நிரப்பி 50 மில்லி வெள்ளை வினிகர் கலந்து கொள்ள வேண்டும்.பிறகு இந்த நீரை கட்டில் முழுவதும் ஊற்ற வேண்டும்.இவ்வாறு செய்தால் மூட்டைப்பூச்சி தொந்தரவு கட்டுப்படும்.
TIPS 04:
தேயிலை மர எண்ணெய்
ஒரு பாத்திரத்தில் சூடான நீரை ஊற்றி இரண்டு தேக்கரண்டி தேயிலை மர எண்ணெய் ஊற்றி கலந்து மூட்டைப் பூச்சிகள் உள்ள இடத்தில் தெளித்தால் அதன் நடமாட்டம் முழுமையாக கட்டுப்படும்.