தனது இசையால் பலரது குடும்பத்தில் ஒருவரான ‘இசைஞானி இளையராஜா அவர்களின் இளைய மகன் தான் யுவன் சங்கர் ராஜா’. தமிழ் திரைப்பட பின்னணி பாடகர், இசையமைப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர் எனப் பல திறமைகளை வெளிப்படுத்துபவர் யுவன். தமிழ் திரையுலகில் ‘ஹிப்ஹாப்’ இசையை அறிமுகம் செய்தவர்.
‘ராம் திரைப்படத்திற்காக 2006 ஆம் ஆண்டு “சைப்ரஸ் சர்வதேச திரைப்பட விருதைப்” பெற்ற ஒரே இந்திய இசையமைப்பாளர் ஆவார்’. இவரது ரசிகர்களால் “யூத் ஐகான்” எனப் பெயர் பெற்றார். 100க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.
யுவன் 2 ஃபிலிம் பெர் விருதுகளை பெற்றுள்ளார். இவர் படித்து வந்த காலத்தில்,தான் ஒரு விமானி ஆக வேண்டும் என விரும்பினார். ஆனால் இசை குடும்பத்தில் பிறந்ததால் இவரிடம் இருந்து இசை திறமை வெளிப்பட, தொடர்ச்சியாக கம்போஸ் செய்வதில் ஈடுபட்டார். முதன்முதலாக 16 வயதில் தன் முதல் படமான ‘அரவிந்தன்’ படத்தின் முன்னோட்டக் காட்சிகளுக்காக இசை அமைத்தார். மேலும் பல படங்களைத் தொடர்ந்து ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தில் இசையமைத்தார்.
இப்படத்தில் அவரது பணி குறித்து அவர் கூறுகையில்,
இப்படத்தில் நான் நல்ல இசையை தான் கொடுத்தேன். ஆனால் இப்படம் சரியாக போகவில்லை. அப்பொழுது என்னை ‘ராசி இல்லாத இசை அமைப்பாளர்’ என்று கூறினர். படம் சரியாக போகவில்லை என்றால் அது என் தவறு இல்லை. அந்நேரத்தில் தான் நடிகர் “அஜித் எனது வீட்டிற்கு வந்து தீனா படத்தில் நீங்கள் தான் இசையமைக்க வேண்டும்” என சொன்னார். அவர் கூறியது போன்று, நானும் அப்படத்திலும் இசை அமைத்தேன். அப்படம் வெற்றி கண்டதன் மூலம் எனக்கு தொடர்ச்சியாக படவாய்ப்பு கிடைத்தது என்றார். என்னை இசையமைப்பாளராக வேண்டாம் என நினைத்த நிலையில், அஜித் அவர்கள் தான் ‘எனக்கு நீங்கள் நன்றாக பண்ணுவீர்கள்’ என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.