Ranipet District: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி வகுப்பறையில் மாணவி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.
பள்ளி வகுப்பறையில் மாணவி ஒருவர் பாடம் நடத்தி கொண்டு இருக்கும் போதே மயங்கி விழுந்து உயிரிழந்தது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்து இருக்கிறது. வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் தோல் மருத்துவராக பணிபுரிந்து வருபவர் வசந்தகுமார்.
இவர் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த பெல்லி அப்பா நகர் வள்ளலார் தெருவில் வசித்து வருகிறார். இவரது இளைய மகள் ஈஷா அத்விதா, தனியார் பள்ளியில் சுமைதாங்கி என்ற ஊரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவியின் வீட்டின் அருகில் பள்ளி உள்ளதால், தினமும் காலையில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம்.
சம்பவத்தன்று ஈஷா அத்விதா பள்ளிக்கு சென்று இருக்கிறார். வகுப்பறையில் ஆசிரியர் பாடம் எடுத்துக் கொண்டிருக்கும் போது, அந்த மாணவி அருகில் அமர்ந்து இருக்கும் சக மாணவியிடம் பேசிக்கொண்டு இருக்கும் சமயத்தில் அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு மயங்கி இருக்கிறார். வகுப்பில் இருந்த ஆசிரியர் உடனடியாக பள்ளி நிர்வாகத்திற்கு இதனை தெரியப்படுத்தி இருக்கிறார்.
மயக்க நிலையில் சிறு அசைவுகள் எதுவும் இல்லாமல் இருந்த மாணவி ஈஷா அத்விதாவை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்று இருக்கிறார்கள். மருத்துவர்கள் பரிசோதித்த போது மனைவி ஏற்கனவே உயிரிழந்து இருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்து இருக்கிறார்கள். மேலும் போலீசார் உத்தரவு அடிப்படையில் மாணவியின் உடல் பிரத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.
அதன் முடிவில் மாணவி இதய நோய் காரணமாக அவர் உயிரிழந்து இருப்பது உறுதியானது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது போன்ற இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவதற்கு முறையான வாழ்க்கை முறையை பின்பற்றாமல் இருப்பது தான் காரணம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.