நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் தற்கொலைக்கு முயன்றவர்!! சிவாஜியை விட அதிக சம்பளம் கேட்ட அதிர்ச்சி!!

0
106
He tried to commit suicide without getting a chance to act!! Shocked to be paid more than Shivaji!!
He tried to commit suicide without getting a chance to act!! Shocked to be paid more than Shivaji!!

தமிழ் சினிமாவில் காமெடியின் மூலம் உச்சம் தொட்டவர் நடிகர் சந்திரபாபு. இவர் ஆரம்ப காலத்தில் படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு தேடி அலைந்தவர். படம் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் மனம் நொந்து தற்கொலைக்கு முயன்றது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட இவர் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி ஆகியோருடன் நெருக்கமாக இருந்த நிலையில் சிவாஜி உடன் ஒரு படத்தில் நடிப்பதற்காக அவரை விட அதிக சம்பளம் கேட்டு இருக்கிறார்.
சந்திரபாபு நடிகர் மட்டுமின்றி இயக்குனர் கதாசிரியர் மற்றும் பாடகர் என பன்முகங்களை கொண்ட திறமை மிகுந்தவர்.

1947 ஆம் ஆண்டு வெளியான “தனா அமராவதி” என்ற படத்தில் சந்திரபாபு அவர்களுக்கு பழம்பெரும் நடிகரான டி ஆர் மகாலிங்கம் அவர்கள் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து சந்திர பாபு அவர்கள் பல படங்களில் நடித்திருப்பது அனைவரும் அறிந்ததே.

டி ஆர் மகாலிங்கம் தயாரிப்பு இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான சின்னதுரை படத்தில் டி ஜி லிங்கப்பா இசையில் நடிகர் சந்திரபாபு அவர்கள் தன்னுடைய குரலில் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். அதிலும் குறிப்பாக, இந்தியாவில் முதல்முறையாக ஆங்கில பாடலை பாடியது, யூட்லிங் பாடலை பாடியது மற்றும் வெஸ்டர்ன் பாடல்களை பாடியது என அனைத்து பெருமைகளும் நடிகர் சந்திரபாபு அவர்களையே சாரும்.

இப்படி பன்முகங்களை கொண்டு அறிஞர் சந்திரபாபு அவர்கள் சிவாஜியை விட அதிக சம்பளம் கேட்ட நிகழ்வானது 1961 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ” பாவ மன்னிப்பு ” என்ற திரைப்படத்தின் பொழுது ஏற்பட்டிருக்கிறது.

இந்த திரைப்படத்தில் சந்திரபாபு அவர்கள் கதை எழுத ஏ பீம்சிங் இதனை இயக்கி அவரே தயாரித்தும் உள்ளார். ஆரம்ப காலத்தில் சந்திரபாபுவினை கதாநாயகனாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் நிதி நெருக்கடியின் காரணமாக சில நாட்களிலேயே நிறுத்தப்பட்டது. அதன்பின் ஏவிஎம் நிறுவனத்திடம் பைனான்ஸ் கேட்டுள்ளார் பீம்சிங்.

எடுத்தவரை இந்த படத்தினை போட்டு பார்த்த ஏ வி எம் செட்டியார் இந்த படத்தில் சந்திரபாபு நடித்த நன்றாக இருக்காது. உங்களுக்கு தான் சிவாஜியை நன்றாக தெரியுமே அவரை நடிக்க வையுங்கள் என்று கூறியிருக்கிறார். படக்குழு இதனை சந்திரபாபுவிடம் தெரிவிக்க அவர் சிவாஜியை விட ஒரு ரூபாய் சம்பளம் அதிகமாக கேட்டிருக்கிறார். வேறு வழி இல்லாமல் பட குழுவும் சிவாஜிக்கு கொடுத்த சம்பளத்தை விட ஒரு ரூபாய் அதிகமாக சந்திரபாபு அவர்களுக்கு வழங்கி இருக்கிறது.

அதன்பின், இந்தத் திரைப்படத்தில் சிவாஜி, ஜெமினிகணேசன், எம்ஆர் ராதா, சாவித்திரி மற்றும் தேவிகா ஆகியோர் நடிக்க மிகப்பெரிய வெற்றிப்படமாக இத்திரைப்படம் அமைந்தது.

Previous articleஇன்று 19 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
Next articleஇந்தியன் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு அற்புதமான செய்தி!!124 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்!!