சினிமாவிற்கு நடிகராக வருவதற்கு முன் ‘ரஜினிகாந்த் நடத்துனராக’ பணிபுரிந்து வந்தார். அப்பொழுது, ஏற்பட்டது தான் போதைப் பழக்கம். இப்பழக்கத்தை பற்றி அவர் கூறுகையில், ‘வேலை முடிந்து வந்த பிறகு மது அருந்தி விடுவேன். ஒரு நாளைக்கு கணக்கே இல்லாமல் சிகரெட்டுகள் பிடிப்பேன். இரு வேளையாவது அசைவ உணவு சாப்பிடுவேன்’. இப்பழக்கங்கள் எல்லாம் என்னை அறியாமலே, என் உடம்பை பாழாக்கியது. “இப்பழக்கங்கள் உடம்பிற்கு கேடு விளைவிக்கும்”.
தமிழ் திரையுலகில் முதலில் கதாநாயகனாக அறிமுகமாகவில்லை என்றாலும், நாளடைவில் இவரது ஸ்டைல் மூலம் சூப்பர் ஸ்டார் நடிகரானார். இப்போதை பழக்கத்தை, நடிகரான பிறகும் ‘கண்டினியூ’ செய்து வந்தாராம்!!
இந்நிலையில், “இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் இவர் படம் நடித்த போது, படப்பிடிப்பு முடிந்து ஹோட்டலுக்கு திரும்பியப் பின், யாருக்கும் தெரியாமல் எனது அறையில் மது அருந்துவேன்”. மது அருந்திய பின்பு பாலச்சந்தர் படம் பற்றி பேச அழைத்து இருந்தார். உடனே ‘டக்கென்று குளித்துவிட்டு,மது வாடை அவருக்கு தெரியாமல் இருக்க அவரை விட்டு தூரமாக பேசி வந்தேன்’. ஒரு கட்டத்திற்கு மேல் அவர், நான் “மது அருந்தி இருப்பதை தெரிந்து, என்னை பயங்கரமாக திட்டி விட்டார்” என ரசிகர்கள் முன்னிலையில் தெரிவித்தார்.
“என்னுடைய மனைவிதான் என்னை போதைப் பழக்கத்தில் இருந்து முற்றிலும் வெளியேற்றினார்”. நான் அப்பழக்கங்களை கைவிடாது இருந்தால் ‘என்னால் 60 வயதிற்கு மேல் வாழ்ந்திருக்க முடியாது’. என்னுடைய மனைவி,”அவளது பாசத்தின் மூலம் என்னை அந்த போதைப் பழக்கத்திலிருந்து முற்றிலும் விடுபட வைத்தார்” என அவ்வளவு பெரிய நடிகர் தனது ரசிகர் பட்டாளங்களின் நலன் கருதி, இதை ஒரு மேடையில் ஓபன் ஆக கூறியுள்ளார்.
இவரது ரசிகர்களும் இவர் பேச்சை கேட்டு,பலர் மனம் மாறி, திருந்தி தன் வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர். இவர் தான் உண்மையில் “தலைவன்”. அவர் நினைத்திருந்தால், இவரோட பழங்கால கெட்ட பழக்கத்தை பற்றி சொல்லாமல் மறைத்திருக்க முடியும். ஆனால் “தன்னை நம்பி இருக்கும் ரசிகர்களுக்கு எடுத்துக்காட்டாக அவர் இதனை பகிரங்கமாக பகிர்ந்து தலைவன் என நிரூபித்துள்ளார்”.