கார்த்திகை தீபத்தில் பழைய பூஜை பொருட்களை புதியதாக்க இந்த தூள் உப்பை இப்படி யூஸ் பண்ணுங்க!!

0
55
Use this powdered salt like this to make old pooja items new in Karthika Deepam!!
Use this powdered salt like this to make old pooja items new in Karthika Deepam!! Use this powdered salt like this to make old pooja items new in Karthika Deepam!!

இன்று மாலை வீட்டில் விளக்கேற்றி கார்த்திகை தீபத்தை கொண்டாட அனைவரும் காத்துக் கொண்டிருப்பீர்கள்.இந்த கார்த்திகை தீப நாளில் வீட்டில் பூஜை செய்ய உள்ளவர்கள் பூஜை பாத்திரங்களை முறையாக சுத்தம் செய்த பிறகு பயன்படுத்துங்கள்.

பழைய பூஜை பொருட்களை புதிது போன்று மாற்றும் ட்ரிக்ஸ்:

தேவைப்படும் பொருட்கள்:

1)தூள் உப்பு – இரண்டு தேக்கரண்டி
2)எலுமிச்சை தோல் பொடி – ஒரு தேக்கரண்டி
3)சோப் திரவம் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:

முதலில் எலுமிச்சை தோல் பொடி இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள்.இல்லையென்றால் எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை பாத்திரத்தில் பிழிந்து கொள்ளுங்கள்.

பின்னர் எலுமிச்சை தோலை பாத்திரத்தில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து இரண்டு தேக்கரண்டி தூள் உப்பை எலுமிச்சை சாறில் போட்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள்.பிறகு கொதிக்க வைத்த எலுமிச்சை தோல் நீரை அதில் ஊற்றிக் கொள்ளுங்கள்.அடுத்து வீட்டில் பூஜை பொருட்களை அதில் போட்டு 15 நிமிடங்களுக்கு ஊறவிடுங்கள்.

பிறகு ஒவ்வொரு பூஜை பொருளையும் தனித் தனியாக துடைத்து எடுக்கவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சோப் திரவம் ஒரு தேக்கரண்டி சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.தற்பொழுது துடைத்த பூஜை பாத்திரங்களை அதில் போட்டு 15 நிமிடங்களுக்கு ஊறவிடுங்கள்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சோப் திரவத்தில் ஊறவைத்த பூஜை பொருட்களை அதில் போட்டு கழுவி எடுக்கவும்.இவ்வாறு செய்தால் பூஜை பொருட்கள் அனைத்தும் பளிச்சிடும்.

Previous articleசாப்பிட்ட உணவு உடனே செரிக்க இந்த ஒரு உருண்டையை உணவிற்கு முன் எடுத்துக்கோங்க!!
Next articleபிரசவித்த பெண்கள் எத்தனை நாட்கள் கழித்து உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் தெரியுமா?