crime: மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரை கொன்ற தந்தை.
இந்தியாவில் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது.அந்த வகையில் தெலுங்கானாவில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, ஆந்திர பிரதேச மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள ராஜம்பேட் பகுதியை சேர்ந்தவர் ஆஞ்சநேய பிரசாத்.
இவர் குடும்ப வறுமை காரணமாக குவைத் நாட்டில் பணி புரிந்து வருகிறார். இவருக்கு 12 வயது மகள் ஒருவர் இருக்கிறார். அவரது மகள் ஆஞ்சநேய பிரசாத் மனைவியின் சகோதரி ஊரான ஒபுலவாரிப்பள்ளி கிராமத்தில் சென்று இருக்கிறார். அப்போது சகோதரியின் மாமனார் ஆஞ்சநேயலு வயது 59 சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு இருக்கிறார்.
இது குறித்து தனது தந்தையிடம் தாக்கு நடந்த கொடுமையை சொல்லி இருக்கிறார் அந்த சிறுமி. இதனால் ஆத்திரம் அடைந்த ஆஞ்சநேய பிரசாத். டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் குவைத்தில் இருந்து இந்தியா திரும்பி கடந்த சனிக்கிழமை தூங்கிக் கொண்டிருந்த ஆஞ்சநேயலுவை அடித்துக் கொன்றுவிட்டு, அதே நாளில் குவைத் புறப்பட்டு இருக்கிறார்.
அவர் குவைத் நாட்டிற்கு சென்ற பின் தனது மகளுக்கு நடந்த கொடுமை பற்றியும், அதற்காக ஆஞ்சநேயலுவை கொலை செய்து இருப்பது குறித்து வீடியோ பதிவை ஒன்றை வெளியிட்டு இருந்தார். எனவே இந்திய போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.