பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு ஏற்பட்ட விபரீதம்!! ரசிகர்களுக்கு இடையே பரபரப்பு!!

0
90

நடிகர் அக்ஷய் குமார் 30 வருட கால சினிமா வாழ்க்கையில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களும் இவரும் ஒருவர். இவர் ஆரம்ப காலகட்டத்தில், குத்து சண்டை விளையாட்டின் மீது ஆர்வம் ஏற்பட்டதால் முறையாக அதனை கற்று, குத்துச்சண்டை பயிற்சியாளர் ஆனார்.

தொடர்ந்து குத்துச்சண்டை ஆசிரியராக பயிற்சி அளித்து வந்த நிலையில், அவருடைய மாணவனின் தந்தை அக்ஷயை மாடலிங் துறையில் அறிமுகப்படுத்தினார். அவர் குத்துச்சண்டை வீரராக மாதத்திற்கு வாங்கும் சம்பளத்தை, மாடலிங் துறையில் இரண்டே நாட்களில் அப்போது பெற்றார்.

அதன் பிறகு தான் சினிமா துறையில் அவருக்கு ஆர்வம் வந்தது. இவரது முதல் படத்தில் குத்துச் சண்டை பயிற்சியாளராக பணிபுரிந்துள்ளார். அதனைத் தொடர்ந்து ‘1992 ஆம் ஆண்டு கில்லாடி’ என்ற படத்தில் காதல் நாயகனாக தோன்றினார். இப்படத்தின் வெற்றியின் மூலம் இவரது சினிமா கெரியர் உயர்ந்தது. 2019,2020 ஆம் ஆண்டுகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் இவரும் இடம் பெற்றார்.

இவர் தற்போது “ஹவுஸ்புல் 5” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்பட சூட்டிங் ஸ்பார்ட்டில் திடீரென இவருக்கு விபத்து ஏற்பட்டது. அவர் கண்ணில் பலத்த காயமடைந்த நிலையில், சூட்டிங் ஸ்பாட்டிற்கு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். மருத்துவர்கள் அக்ஷயை சோதித்து பார்த்துவிட்டு, சில நாட்கள் ஓய்வெடுக்கும்படி பரிந்துரைத்து உள்ளனர். இச்சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Previous articleதான் ஏமாற்றப்பட்டது கூட தெரியாமல் இருந்த இயக்குனர் விக்னேஷ் சிவன்!!
Next article“தீயாக பரவிய வதந்தி!! ஆத்திரமடைந்து எச்சரித்த சாய் பல்லவி!!”