தமிழகத்தில் ஊரடங்கு ஜூன் 30 தேதி வரை போடப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தெற்கு ரயில்வே வருகின்ற ஜூலை மாதம் 15 தேதி வரை சிறப்பு ரயில்கள் சேவையை தமிழகத்தில் ரத்து செய்துள்ளது.
தமிழகத்தில் சிறப்பு ரயில் சேவையை ரத்து செய்துள்ள தெற்கு ரயில்வே
திருச்சி- செங்கல்பட்டு,மதுரை- விழுப்புரம், அரக்கோணம்-கோவை,கோவை-மயிலாடுதுறை,
திருச்சி-நாகர்கோவில்,கோவை- காட்பாடி ஆகிய வழித்தடங்களில் இயங்கும் ரயில் சேவையை ரத்து செய்துள்ளது.மேலும் சென்னை சென்ட்ரலில் இருந்து டெல்லி செல்லும் ராஜ்தானி ரயில் மட்டும் வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்த அனைத்து பயணிகளுக்கும் முழு தொகையும் திரும்பி வழங்கப்படும்.மேலும் ஆன்லைன் மூலம் முன்பதி செய்தவர்களுக்கு அவர்களது வங்கி கணக்கிற்கு பணம் திருப்பி அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30ம் தேதி ஊரடங்கு முடியும் நிலையில் தெற்கு ரயில்வே ஜூலை 15 வரை ரயில் சேவையை ரத்து செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.