தமிழ் சினிமா துறையில் நடிகராகவும் கவிஞராகவும் மற்றும் பாடலாசிரியராகவும் திகழ்ந்த வருபவர் சினேகன் அவர்கள்.2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இடைநிலை ஆசிரியரான இவர் 2000-ஆம் ஆண்டு பாடல் எழுதத் தொடங்கினார். இவர் கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராகப் பணியாற்றிய பின்னர் புத்தம் புது பூவே திரைப்படத்தில் பாடலாசிரியரானார். 2009 ஆம் ஆண்டில் யோகி என்ற திரைப்படத்தில் நடிகராகவும் அறிமுகமானவர் கலைஞர் சினேகன்.
தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் கவிஞர் வைரமுத்துவிடம் பல ஆண்டுகள் உதவியாளராக பணிபுரிந்த பொழுது தான் கவிதை எழுதுவது வைரமுத்து அவர்களுக்கு தெரியாது என்று நடிகர் சினேகன் குறிப்பிட்டிருக்கிறார்.
கவிஞர் வைரமுத்துவிடும் ஏற்பட்ட சிறிய மனஸ்தாபத்தால் அவரை விட்டு பிரிந்து வந்த நிலையில், தன்னுடைய முதல் கவிதை தொகுப்பு விழாவிற்கு அவரை அழைத்ததாகவும் அவர் வர மறுத்து விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், படங்களில் நான் பாடல் இயற்றுகிறேன் என்றால் என்னோடு அவர் பணிபுரிய மாட்டேன் என்று பல படங்களில் கூறியதாகவும், அதனால் தனக்கு பல படங்களின் வாய்ப்புகள் கைநழுவி சென்று விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் கவிஞர் சினேகன்.என் மீது ஏன் கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு இவ்வளவு கோவம் என்று புரியவில்லை என்று கவிஞர் சினேகன் தெரிவித்திருக்கிறார்.