தமிழ் மாதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதம் என்று மார்கழி மாதத்தை சொல்லலாம்.இந்த மாதத்தை தானுர் மாதம் என்றும் அழைக்கிறார்கள்.மார்கழி சிவன் மற்றும் விஷ்ணு பகவானுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது.
இத்தனை சிறப்புடைய மார்கழி வருகின்ற திங்கட் கிழமை அதவது டிசம்பர் 16 அன்று பிறக்கிறது.இந்த மாதத்தில் அதிகாலை நேரத்தில் எழுந்து தலைக்கு நீராடிவிட்டு வீட்டு வாசலில் வண்ணக் கோலமிடுவதை பலரும் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.பெண்கள் வீட்டு வாசலில் கோலமிட வேண்டும் என்பதும் ஆண்கள் பஜனைக்கு செல்ல வேண்டும் என்பதும் நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வரும் பழக்கமாக உள்ளது.
இதர தமிழ் மாதங்களில் குறிப்பிட்ட சில நாட்கள் மட்டும் கடவுள் வழிபாட்டிற்கு உகந்த மாதமாக இருக்கும்.ஆனால் மார்கழி மாதத்தில் மட்டும் அனைத்து தினங்களும் கடவுள் வழிபாட்டிற்கு உரிய மாதமாக உள்ளது.நிறைய சிறப்புகள் கொண்ட இந்த மார்கழி மாதத்தை சிலர் பீடை மாதம் என்று கூறுகின்றனர்.
இந்த மாதம் இறை வழிபாட்டிற்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதால் வேறு மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதில்லை.மார்கழி மாதத்தில் புதுவீடு புகுதல்,திருமண நிகழ்ச்சி போன்ற சுப காரியங்களில் மக்கள் ஈடுபட விரும்புவதில்லை.
அதேபோல் காதுகுத்து,நிச்சயதார்த்தம்,வாகனப் பதிவு செய்தல் மற்றும் புதிதாக வாகனம் வாங்குதல் போன்ற சுப காரியங்களை செய்யக் கூடாது.புதுமனை வாங்குதல்,வாடகை வீடு குடி பெயர்தல்,பத்திரப்பதிவு போன்ற விஷயங்களையும் இந்த மார்கழி மாதத்தில் செய்யக் கூடாது.