கர்நாடக மாநிலத்தில் இனி ஒவ்வொரு ஞாயிறும் முழு முடக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது.இந்த மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,923 ஆக அதிகரித்துள்ளது.
இதை தடுக்க மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக ஏற்கனவே ஓவ்வொரு ஞாயிறு அன்றும் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்த நிலையில் மீண்டும் ஞாயிறு முழு முடக்கத்தை கர்நாடக அரசு அறிவித்துள்ளது.இதன்படி ஜூலை 5 ஆம் தேதி முதல் ஓவ்வொரு ஞாயிறு அன்றும் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முழு முடக்கம் உள்ளபோது அத்தியாவசிய கடைகள் தவிர வேறு எந்த கடைகளும் திறந்திருக்க கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு அலுவலகங்களும் ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் இயங்காது என்றும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது.