Tamil Nadu Govt: மூத்த குடிமக்கள் பேருந்தில் இலவச பயணம் செய்ய தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
தமிழக அரசு பெண்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்தது. விலையில்லா பேருந்து பயணம், மகளிர் உரிமை தொகை முதலிய திட்டங்கள் மிக முக்கிய ஒன்று ஆகும். தற்போது வயதில் மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் அதிரடி மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
அதாவது வரும் டிசம்பர்-21ஆம் தேதி முதல் மூத்த குடிமக்கள் பேருந்தில் இலவச பயணம் செய்ய டோக்கன்கள் வழங்கப்படும் என்பது ஆகும். இந்த டோக்கன்களை பெற மூத்த குடிமக்கள் தங்களிடம் உள்ள ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்வி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் இருப்பிட சான்றாக குடும்ப அட்டை, வயது சான்றிதழ் போன்றவற்றை போக்குவரத்து கழக அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.
மேலும் இந்த திட்டமானது வருகின்ற ஆண்டு 2025 ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை நடைமுறையில் இருக்கும். இந்த திட்டம் சுமார் 6 மாத காலங்களுக்கு மட்டுமே நடைமுறையில் செயல்படும் என அறிவித்து இருக்கிறார்கள். மேலும் ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வழங்ககப்படும். இதன் மூலம் மாதத்திற்கு 10 முறை இலவச பேருந்து பயணம் செய்யலாம். குறிப்பாக சென்னையில் உள்ள மூத்த குடிமக்களுக்கு மட்டும் இத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தை பயன்படுத்தி மருத்துவ காரணத்திற்காக மூத்த குடிமக்கள் இலவசமாக பேருந்தில் பயன் செய்வார்கள். இந்த நிலையில் சமூக வலைதளத்தில் ஏற்கனவே மகளிர்க்கு இலவச பேருந்து பயண மேற்கோள் வந்தால் போக்குவரத்து துறைக்கு வருமானம் இழப்பீடு அதிகரித்து இருக்கிறது. மேலும், பெண்களுக்கு உரிமைத் தொகை என்ற பெயரில் மாதந்தோறும் 1000 ரூபாய் கொடுக்கிறது.
அதை ஈடு செய்ய டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து மது விற்பனை படுஜோராக நடத்தி வருகிறது தமிழக அரசு. இது போன்ற இலவசம் திட்டங்களை நிறுத்தி விட்டு வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டும் என விமர்சனங்கள் எழுந்து வருகிறது.