Krishnagiri District: ஜெலட்டின் குச்சிகள் இருப்பதை அறியாமல் வெல்டிங் வைத்த நபர் வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மடம்பட்டி ஊரில் வெல்டிங் பட்டறை ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த வெல்டிங் பட்டறை ஜெயசங்கர் என்பவர் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று பட்டறையில் வெல்டிங் பணியில் ஈடுபட்ட போது வெடி விபத்து ஏற்பட்டு இருக்கிறது. அதாவது, கிணறு தோண்டுவதற்கான மற்றும் பாறைகளில் துளையிடுவதற்காக கம்பர்சர் இணைப்புகள் கொண்ட டிராக்டர்கள் பயன்படுத்தப்படுகிறது.
அதற்காக பயன்படுத்தப்பட்ட பெட்டி ஒன்றை பொருத்துவதற்காக ஜெயசங்கர் வெல்டிங் பட்டறைக்கு கம்பரசர் டிராக்டர் ஒன்று வந்து இருக்கிறது. அந்த டிராக்டரில் வெல்டிங் பணியை நேற்று மாலை மேற்கொண்டிருக்கிறார் ஜெயசங்கர். அப்போது அந்த பெட்டியில் இருந்த ஜெலட்டின் குச்சிகள் மிகுந்த சத்தத்துடன் வெடித்து இருக்கிறது.
அந்த விபத்தில் ஜெயசங்கர் உடல் சிதறி உயிரிழந்தார் அவருக்கு உதவி செய்த இரண்டு பணியாளர்கள் படுகாயம் அடைந்தார்கள். இந்த விபத்தின் போது வெடித்து சிதறிய இரும்பு துண்டு ஒன்று அருகில் இருந்த பேக்கரி வாடிக்கையாளரின் கையில் பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கிறது. இது கருத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
அருகில் இருந்த கடை உரிமையாளர்களிடம் விபத்து குறித்து விசாரித்த போது கல்குவாரிகளில் பாறைகளை தகர்ப்பதற்காக பயன்படுத்தப்படும் வெடிபொருள் ஜெலட்டின் குச்சிகள் பெட்டியில் இருப்பது குறித்து கடை உரிமையாளர் ஜெயசங்கரிடம் தெரிவிக்க வில்லை அதனால் பேட்டியின் உள் வெடிபொருள் இருப்பதை அறியாமல் வெல்டிங் வைத்து இருக்கிறார். இதுவே விபத்து ஏற்பட காரணம் என தெரியவந்துள்ளது.