ஒரு பீஸ் உருளைக்கிழங்கை வைத்து ப்ரீசரில் குவிந்துள்ள ஐஸ்கட்டிகள் மொத்தத்தையும் கரைத்துவிடலாம்!!

0
87

இக்காலகட்டத்தில் அனைவரது வீடுகளில் பிரிட்ஜ் அவசியம் இருக்கும்.சிங்கிள் டோர் டபுள் டோர் என்று பல வகை மாடல்களில் பிரிட்ஜ் விற்பனையாகி வருகிறது.இல்லத்தரசிகள் காய்கறி,மாவு போன்றவற்றை பராமரிக்கவே பிரிட்ஜ் பயன்படுகின்ரனர்.

 

பிரிட்ஜ் வாங்கி சில நாட்கள் மட்டுமே அதை பராமரிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.பிறகு முறையான பராமரிப்பு இல்லாமல் அவை சீக்கிரம் பழுதடைந்துவிடுகிறது.பிரிட்ஜ் பராமரிப்பு இல்லையென்றால் விபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

 

எனவே வாரத்திற்கு ஒருமுறையாவது பிரிட்ஜை துடைத்து பராமரிப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.சிலர் வீட்டு பிரிட்ஜ் ப்ரீசரில் ஐஸ்கட்டிகள் மலைப்போல் குவிந்து கிடக்கும்.இதனால் ப்ரீசர் கதவுகளை திறக்க முடியாமல் சிரமம் ஏற்படும்.

 

அதேபோல் ப்ரீசரில் எந்த ஒரு பொருளையும் வைத்து பராமரிக்க முடியாமல் போகும்.ப்ரீசரில் அதிகமாக ஐஸ்கட்டிகள் குவிந்தால் பிரிட்ஜின் ஆயுட்காலம் குறைந்துவிடும்.சிலர் ஐஸ்கட்டிகளை கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்கள் கொண்டு உடைத்து எடுக்க முயற்சி செய்வார்கள்.இது பிரிட்ஜை சேதப்படுத்தும் செயலாகும்.

 

சிலர் பிரிட்ஜ் சுவிட்சை ஆப் செய்து ஐஸ்கட்டியை கரைக்க முயற்சி செய்வார்கள்.இதனால் ஐஸ்கட்டி கரைந்து பிரிட்ஜில் உள்ள உணவுப் பொருட்களை விரைவில் அழுக வைத்துவிடும்.

 

பிரிட்ஜில் ப்ரீசரில் உள்ள ஐஸ்கட்டிகளை அகற்ற உருளைக்கிழங்கை பயன்படுத்தலாம்.ஒரு உருளைக்கிழங்கை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.பிறகு அதன் மீது கல் உப்பு அல்லது தூள் உப்பு தூவி ப்ரீசரில் படிந்துள்ள ஐஸ்கட்டிகள் மீது வைத்து தேய்க்கவும்.

 

இவ்வாறு செய்தால் ப்ரீசரில் படிந்துள்ள ஐஸ்கட்டிகள் முழுமையாக கரைந்துவிடும்.இதை முயற்சிப்பதற்கு முன்னர் பிரிட்ஜில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்திவிட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.ப்ரீசரில் உள்ள ஐஸ்கட்டிகளை கரைக்க இனி உப்பு மற்றும் உருளைக்கிழங்கை மட்டும் பயன்படுத்தினால் போதுமானது.

Previous articleபெருங்குடலில் குவிந்து கிடக்கும் மலங்கள் வழுக்கி கொண்டு வெளியேற இந்த ஜூஸ் குடிங்க!!
Next articleஉடலில் குட் கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் உலர் விதை ட்ரிங்க்!! 7 நாளில் ரிசல்ட் கிடைக்கும்!!