பனி காலத்தில் உதடுகள் காய்ந்து அதிக வலியை உண்டாக்குகிறது.சிலருக்கு உதடு வெடிப்பு ஏற்பட்டு இரத்தம் வெளியேறும்.இதனால் உணவு உட்கொள்வதில் சிரமம் ஏற்படும்.உதடுகளை மிருதுவாக வைத்துக் கொள்ள கீழ்கண்ட டிப்ஸ் உதவும்.
தேவையான பொருட்கள்:
1)தேங்காய் எண்ணெய்
2)கற்றாழை ஜெல்
பயன்படுத்துவது எப்படி?
முதலில் ஒரு துண்டு கற்றாழையை எடுத்து தோல் நீக்கிவிட்டு அதன் ஜெல்லை மட்டும் பிரித்துக் கொள்ளுங்கள்.
பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு மைய்ய அரைத்துக் கொள்ளுங்கள்.அடுத்து ஒரு கிண்ணத்திற்கு கற்றாழை ஜெல்லை மாற்றிய பிறகு ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை ஊற்றி நன்றாக கலக்குங்கள்.பிறகு இதை உதட்டின் மீது பூசினால் உதடுகள் காய்வது குறையும்.
தேவையான பொருட்கள்:
1)சர்க்கரை
2)தண்ணீர்
பயன்படுத்துவது எப்படி?
ஒரு தேக்கரண்டி சக்கரையில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.பிறகு இதை உதடுகளின் மீது அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து தண்ணீர் கொண்டு உதடுகளை சுத்தம் செய்யுங்கள்.இவ்வாறு செய்தால் உதடுகள் வறண்டு போகாமல் மிருதுவாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
1)தேன்
2)பீட்ரூட்
பயன்படுத்துவது எப்படி?
ஒரு சிறிய சைஸ் பீட்ரூட்டை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.பிறகு இதை மிக்சர் ஜாரில் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து பீட்ரூட் சாறை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்.அவை கெட்டியானதும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து நன்றாக கலந்து உதடுகளில் அப்ளை செய்யுங்கள்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் உதடு வறண்டு போகாமல் மிருதுவாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
1)ரோஜா பூ இதழ்
2)தேன்
பயன்படுத்துவது எப்படி?
முதலில் ஒரு கப் அளவிற்கு ரோஜா இதழை எடுத்து மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து ப்ரீசரில் வைத்து பதப்படுத்தவும்.பிறகு இந்த ரோஜா இதழ் பேஸ்டை உதடுகளை அப்ளை செய்தால் உதடுகள் மிருதுவாக இருக்கும்.