தினமும் சமைப்பதால் அடுப்பில் எண்ணெய் பிசுபிசுப்பு,உணவுக் கறைகள்,பால் மற்றும் டீ கறைகள் படிந்துவிடுகிறது.இதுபோன்ற கறைகளை எளிதில் நீக்கும் ட்ரிக்ஸ் சொல்லப்பட்டுள்ளது.இதில் ஒன்றை செய்து வந்தால் அடுப்பு புத்தம் புதிது போன்று ஜொலிக்கும்.
தேவைப்படும் பொருட்கள்:
1)சோப் தூள் – ஒரு தேக்கரண்டி
2)வினிகர் – அரை தேக்கரண்டி
3)எலுமிச்சை தோல் – இரண்டு
4)சோடா உப்பு – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:
முதலில் எலுமிச்சை தோல் எடுத்து பாத்திரம் ஒன்றில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
எலுமிச்சை தோல் நீர் நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும்.அதன் பிறகு பாத்திரம் ஒன்றை எடுத்து கொதிக்க வைத்த எலுமிச்சை நீரை அதில் சேர்த்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு தேக்கரண்டி சோப் தூள்,அரை தேக்கரண்டி வினிகர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.பிறகு கேஸ் அடுப்பின் மீது தண்ணீர் ஊற்றி ஒரு தேக்கரண்டி சோடா உப்பை தூவிவிட்டு 10 நிமிடங்கள் ஊறவிடவும்.
அதன் பிறகு தயாரித்து வைத்துள்ள எலுமிச்சை வினிகர் நீரை அடுப்பின் மீது ஊற்றி ஒரு ஸ்க்ரப்பர் கொண்டு தேய்த்தால் எண்ணெய் பிசுபிசுப்பு,பால் கறை,குழம்பு கறை அனைத்தும் நீங்கிவிடும்.
தேவையான பொருட்கள்:
1)எலுமிச்சம் பழம் – ஒன்று
2)கல் உப்பு – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாறை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ளவும்.
அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து நன்கு கலந்துவிடவும்.பிறகு இதை ஒரு காட்டன் துணியில் ஊற்றி அடுப்பை துடைத்தால் விடாப்பிடியான கறைகள் எளிதில் நீங்கிவிடும்.
தேவையான பொருட்கள்:
1)எலுமிச்சை தோல் – ஒன்று
2)சோடா உப்பு – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு எலுமிச்சம் பழத் தோலை எடுத்துக் கொள்ளவும்.பிறகு அதில் சோடா உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
பிறகு அடுப்பில் தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் ஊறவிடவும்.அதன் பிறகு உப்பு சேர்த்த எலுமிச்சை தோலை கொண்டு அடுப்பை தேய்க்கவும்.இவ்வாறு செய்தால் அடுப்பில் உள்ள கறைகள் அனைத்தும் நீங்கி புதிது போன்று பளிச்சிடும்.