முக அழகை குறைக்கும் பருக்களை இரசாயன க்ரீம் இன்றி மறைய வைக்கும் நேச்சுரல் பேஸ் மாஸ்க் தயார் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.அதிக செலவின்றி முக பருக்களை மறைய வைக்கும் பேஸ் மாஸ்க்கை இப்போவே ட்ரை பண்ணுங்க.
தேவையான பொருட்கள்:
1)வாழைப்பழத் தோல் – ஒன்று
2)தேன் – ஒரு தேக்கரண்டி
பயன்படுத்தும் முறை:
முதலில் ஒரு வாழைப்பழத்தின் தோலை தண்ணீரில் போட்டு நன்றாக கழுவிக் கொள்ளவும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
அதன் பிறகு ஒரு தேக்கரண்டி தூயத் தேனை அதில் ஊற்றி நன்றாக கலந்துவிடவும்.பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி துடைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது தயாரித்து வைத்துள்ள வாழைப்பழத் தோல் பேஸ் மாஸ்க்கை முகத்தில் அப்ளை செய்து 30 நிமிடங்களுக்கு நன்றாக காயவிடவும்.
பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி துடைத்துக் கொள்ளவும்.இவ்வாறு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை முகத்திற்கு வாழைப்பழத் தோல் பேஸ் மாஸ்க்கை பயன்படுத்தி வந்தால் பருக்கள் அனைத்தும் மறைந்துவிடும்.
முகப்பருக்களை போக்கும் மற்றொரு ரெமிடி
தேவையான பொருட்கள்:
1)வாழைப்பழத் தோல் – ஒன்று
2)கஸ்தூரி மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
பயன்படுத்தும் முறை:
முதலில் ஒரு வாழைப்பழத் தோலை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.பிறகு இதை பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சளை வாழைப்பழத் தோல் பேஸ்ட்டில் கொட்டி நன்கு கலந்து முகத்திற்கு அப்ளை செய்து வந்தால் பருக்கள் உருவாவது கட்டுப்படும்.
தேவையான பொருட்கள்:
1)வாழைப்பழத் தோல் – ஒன்று
2)கடலை மாவு – இரண்டு தேக்கரண்டி
பயன்படுத்தும் முறை:
வாழைப்பழத் தோலை அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி கடலை மாவு சேர்த்து நன்றாக கலக்கவும்.பின்னர் இந்த பேஸ்டை முகம் முழுவதும் அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து வாஷ் செய்யவும்.இவ்வாறு செய்து வந்தால் முகப்பருக்கள் மறைந்துவிடும்.