dmk: பணி நிரந்தர ஆணை வழங்கப்பட வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது.
கடந்த 2012 ஆம் ஆண்டு 3,700 உடற்கல்வி, 3,700 ஓவியம், 2,000 கணினி அறிவியல், 1,700 தையல், 300 இசை, 20 தோட்டக்கலை, 60 கட்டிடக்கலை, 200 வாழ்வியல் திறன் போன்ற வேலைகளுக்காக தற்காலிகமாக 12 ஆயிரம் பேர் பகுதி நேர ஆசிரியர்களாக அப்போதைய தமிழக ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்டார்கள். இப் பணியில் நியமிக்க பட்டவர்களுக்கு 12,500 ரூபாய் சம்பளம் மட்டுமே கடந்த 13 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரப்படுகிறது.
மேலும், மே மாதம் சம்பளம், போனஸ், வருங்கால வைப்பு நிதி, மருத்துவ காப்பீடு, பணிக்காலத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரண நிதி போன்றவை கிடையாது அரசால் வழங்கப்படும் எந்தவித சலுகைகள் அவர்களுக்கு இன்று வரை கொடுக்கப்பட வில்லை. எனவே பணி நிரந்தர ஆணை வழங்கப்பட வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில் கடந்த 13 வருடங்களாக பணி நிரந்திரம் பெறாமல் இருக்கிறோம். இத்தனை வருடங்களாக பணிபுரிந்த எங்களுக்கு எவ்வித சம்பள உயர்வு, அரசு சலுகைகளும் கிடைக்கப் பெறவில்லை. எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கிறது. கடந்த 2016 மற்றும் 2021 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளை திமுக பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்திரம் என அறிவித்து இருந்தார்கள்.
தற்போது திமுக அரசு ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் நிறைவு பெற்று இருக்கும் நிலையில் பணி நிரந்தரம் தொடர்பான இந்த வித அறிக்கை மற்றும் நடவடிக்கைகளை தமிழக அரசு செய்யவில்லை எனக் கூறினார்கள். மேலும், முதல்வர் ஸ்டாலின் நினைத்தால் ஒரே கையெழுத்தில் எங்களுக்கு பணி நிரந்தரம் கிடைக்கும் என கோரிக்கை வைத்து இருக்கிறார்கள்.