Sivarajkumar: கன்னட திரைப்பட நடிகர் சிவராஜ்குமார் புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார் என தகவல் வெளியாகி வருகிறது.
கன்னட திரைப்படத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவராஜ்குமார். அவருக்கு 62 வயது ஆகிறது. கடந்த வருடம் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்த படம் ஜெயிலர். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் இணையாக படத்தில் மாஸாக ஹின்றி கொடுத்தவர் தான் கன்னட நடிகர் நடிகர் ரஜினிகாந்த்.
தமிழக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருந்து இவரது நடிப்பு. இந்த நிலையில் தான் கடந்த சில வருடங்களுக்கு முன் இவரது தம்பி நடிகர் புனித் ராஜ்குமார் உயிரிழந்தார். இது கன்னட திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியது. இந்த சோகத்தில் இருந்து அவர் மீண்டு வருவதற்குள் அவருக்கு புற்றுநோய் இருப்பது உறுதியான தகவல் வெளியாகி ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இது தொடர்பாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு “பைரதி ரங்கல்” பட வெற்றி விழாவில் கூறி இருந்தார். மேலும், அறுவை சிகிச்சை செய்து கொள்ள அமெரிக்க செல்ல உள்ளதாகவும் தெரிவித்து இருந்தார். மேலும், நேற்று முன் தினம் அமெரிக்க சென்று இருந்தார். அமெரிக்காவின் மியாமி புற்றுநோய் சிகிச்சை மையத்தில் மருத்துவ பெறுகிறார்.
மருத்துவ சிகிச்சை பெரும் இவர் வருகிற 24 ஆம் தேதி அவருக்கு புற்றுநோய் கட்டிகளை அகற்ற அறுவை சிகிச்சை நடைபெறும் என தகவல் வெளியாகி இருக்கிறது. அவருக்கு நல் வழியாக அறுவை சிகிச்சை நடைபெற வேண்டும் என்று ரசிகர்கள் மற்றும் திரைப்படத் துறையினர் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.