குமாரவ வடிவேல் நடராஜன் என்று காமெடி நடிகர் வடிவேலு நம் அனைவரது மனதையும் தன்னுடைய கதாபாத்திரங்களின் மூலம் சிரிக்க வைத்தவர். அப்படிப்பட்ட இவர் ஏன் 22 ஆண்டுகளாக நடிகர் அஜித்துடன் இணைந்து படத்தில் நடிக்கவில்லை என்ற காரணத்தினை இந்த பதிவில் காண்போம்.
1988 இல், டி. ராஜேந்தரின் என் தங்கை கல்யாணியில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் தன்னுடைய திரை வாழ்க்கையை துவங்கியவர் நடிகர் வடிவேலு ஆவார். அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் சிறிய வேடங்கள் முதல் காமெடி நடிகராக வெற்றி கண்டவர் இவர் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
இப்படிப்பட்ட இவர், நடிகர் அஜித்துடன் 2002 ஆம் ஆண்டு திரைக்கு வந்த ராஜா திரைப்படத்தில் இணைந்து நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தில் நடிக்கும் பொழுது படப்பிடிப்பு தளங்களில் நடிகர் அஜித்குமார் அவர்களை வடிவேலு அவர்கள் வாடா போடா என அழைத்துள்ளார். இவ்வாறு தன்னை அழைக்க வேண்டாம் என நடிகர் அஜித்குமார் அவர்கள் வலியுறுத்தியும் கேட்காமல் அதனை தொடர்ந்து செய்த வண்ணம் இருந்திருக்கிறார் காமெடி நடிகர் வடிவேலு அவர்கள்.
அதன்பின், அத்திரைப்படத்தின் இயக்குனரான எழில் அவர்களும் நடிகர் வடிவேலுவிடம் அவரை வாடா போடா என்று மரியாதை குறைவாக அழைக்க வேண்டாம் என்று வலியுறுத்தி இருக்கிறார். யார் என்ன சொன்னாலும் நான் இப்படித்தான் செய்வேன் என்பது போல தொடர்ந்து நடிகர் அஜித்குமார் அவர்களை மரியாதை குறைவாக பேசி இருக்கிறார் வடிவேலு அவர்கள்.
திரைப்படத்திற்கு பின் இனி நான் நடிப்பது என்றால் திரைப்படத்தில் நடிகர் வடிவேலு இடம்பெறக்கூடாது என திட்டவட்டமாக தெரிவித்து விட்டார் நடிகர் அஜித்குமார். இந்த காரணத்தால் தான் 22 வருடங்களாக நடிகர் அஜித் மற்றும் வடிவேலு இணைந்து எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.