குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி பங்கு பெறாது!! வெளியான தகவல் எதிர்கட்சியினர் கண்டனம்!!

0
280
Information that Tamil Nadu government vehicles will not participate in the Republic Day parade
Information that Tamil Nadu government vehicles will not participate in the Republic Day parade

Republic Day Celebration: வருகின்ற 2025ம் ஆண்டு குடியரசு தின  அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி பங்கு பெறாது என தகவல் வெளியாகி வருகிறது.

இந்தியாவில் குடியரசு தின விழா ஜனவரி 26ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக டெல்லியில் குடியரசுத் தலைவர் தேசிய கொடியை ஏற்றி வைப்பார். மேலும், முப்படைகளின் ராணுவ அணிவகுப்பு நடைபெறும், அடுத்த படியாக இந்திய மாநிலங்களின் பாரம்பரியம், சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூறும் வகையில் அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெறும்.

இந்த அணிவகுப்பில் தமிழக ஊர்தி இடம் பெறாது என தகவல் வெளியாகி வருகிறது. அதாவது, தமிழக அரசின் உண்மை சரிபார்க்கும் பக்கமான “TN Fact Check”என்ற எக்ஸ் தளத்தில் குடியரசு தின விழா தொடர்பாக பதிவு ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் தற்போது குடியரசு தின விழாவில் தமிழ்நாடு ஊர்தி நிராகரிப்பு என்ற வதந்தி பரவி வருகிறது என்றும்,  டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணி வகுப்பில் யூனியன் பிரதேசம் உட்பட 15 மாநிலங்களின் ஊர்திகள் மட்டும் பங்கு பெறும்.

இதற்கான சுழற்சி முறையில் மாநிலங்கள் தேர்வு செய்யப்படுகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக அலங்கார ஊர்தி டெல்லி குடியரசு தின விழாவில் பங்கு பெற்றது. எனவே அனைத்து ஆண்டுகளும் மாநிலங்களின் ஊர்திகள் பங்கு பெற முடியாது. எனவே இந்த ஆண்டு தமிழக அலங்கார ஊர்தி பங்கு பெறாது. 2026 ல் குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக ஊர்தி பங்கு பெறும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

 இந்த நிலையில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இப்பதிவிற்கு அதிமுக ஆட்சியில் குடியரசு தின விழாவில் தமிழக ஊர்தி பங்கு பெறுவது என்பது மரபு என தனது கருத்தை பதிவு செய்து இருக்கிறார்.

Previous articleமகிழ்ச்சியான செய்தி!!பிரதமர் மோடி இன்று 71,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு கடிதங்களை வழங்க உள்ளார்!!
Next articleமீன் பிடிக்க சென்ற 3 இளைஞர்கள் மாயம்!! ஒருவர் சடலமாக மீட்பு!!