30 வருடங்களுக்கு பிறகு சர்வதேச திரைப்படங்களில் வெற்றி பெற்ற முதல் இந்திய திரைப்படம்!!

0
98
After 30 years, the first Indian film to become a hit in international films!!

2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படம் ஆக “ஆல் வி இமேஜின் அஸ் லைட்”. இந்தத் திரைப்படம் ‘பாயல் கபாடியா’ எழுதி இயக்கி உள்ள இந்திய திரைப்படம். இந்த படம் ஒரு சர்வதேச இணை தயாரிப்பாகும். இந்தப் படத்தில் ‘திவ்ய பிரபா, கனி குஸ்ருதி, சாயா கதம் மற்றும் ஹிருது ஹாருன்’ ஆகியோர் நடித்துள்ளனர். ‘2024 ஆம் ஆண்டுக்கான முதல் ஐந்து சர்வதேச படங்களுல் ஒன்றாக தேசிய மதிப்பாய்வு வாரியத்தால் இடம்பெயர்ந்துள்ளது’.

மேலும் இப்படம் “77 வது கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு உயரிய விருதான ‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்றது”. இந்த வருடத்தின் ”சிறந்த திரைப்படத்திற்கான ‘சைட் அண்ட் சவுண்ட்’ வாக்கெடுப்பில் முதலிடத்தை பிடித்துள்ளது”. “82 ஆவது கோல்டன் குளோப் விருதுகளில் ‘சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம் மற்றும் பாயிலுக்காக சிறந்த இயக்குனர்’ ஆகிய இரண்டு பரிந்துரைகளைப் பெற்று முண்ணணியில் உள்ளது”.

“ஒபாமா ஹிட் லிஸ்ட்” :

‘அமெரிக்க முன்னாள் அதிபர் ஆன ஒபாமா வின் இந்த வருட விருப்பப்பட்டியலில் இந்த படமும் ஒன்று’. ஒபாமா ஆண்டுக்கு ஒருமுறை தனக்கு பிடித்த புத்தகங்கள், பாடல்கள், படங்கள் ஆகியவற்றின் விருப்பப்பட்டியலை தயார் செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்வார். இந்த வருட பட்டியலில் நமது இந்திய திரைப்படமும் இடம் பெற்றுள்ளது. 1994 ஆம் ஆண்டுக்கு பின்னர் இப்படம் தான் கிராண்ட் பிரிக்ஸ் விருதை பெற்றுள்ளது என்பது பெருமைக்குரியது.

Previous articleகுறிப்பிட்ட போன்களில் ஜனவரி 1 முதல் whatsapp பயன்படுத்த முடியாது!! மெட்டா நிறுவனம்!!
Next articleஅடுத்த 6 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு!! நகரும் புயல் சின்னம்!!