BJP ADMK: எம்ஜிஆர் மற்றும் மோடி இருவருக்குமிடையே பல ஒற்றுமைகள் இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக இடையே ஏற்பட்ட பிளவு காரணமாக ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டோம் என்பதை அதிமுக திட்ட வட்டமாக தெரிவித்திருந்தது. மேற்கொண்டு அண்ணாமலை தொடர்ந்து அதிமுக-வின் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி என அனைவர் பற்றியும் தனிப்பட்ட முறையில் தனது கருத்தை தெரிவித்து வந்தார்.
இவ்வாறு அவர் கூறியது அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் உச்சகட்டமாக தான் எடப்பாடி, இனி ஒருபோதும் கூட்டணி என்ற பேச்சை கிடையாது என தெரிவித்திருந்தார். இவ்வாறு அண்ணாமலை பேசியதற்கு உட்கட்சிக் குள்ளையே பூசல் ஏற்பட்டது. இவரது கருத்திற்கு தமிழிசை உள்ளிட்டோர் பலரும் எதிர்ப்புதான் தெரிவித்தனர்.
மேற்கொண்டு பாஜக மேலிடமும் இவரை கண்டித்தது. இவ்வாறு இருக்கையில் தான் அரசியல் மேற்படிப்பிற்காக அண்ணாமலை அமெரிக்கா சென்றிருந்தார். அச்சமயம் அதிமுக மற்றும் பாஜக மீண்டும் இணைந்து விடும் என்று பலரும் எதிர்பார்த்தனர். அண்ணாமலை இடத்திற்கு வேறு ஒருவர் நியமித்து இது அனைத்தும் சரி செய்யப்படும் என்ற பேச்சும் அடிபட்டது.
ஆனால் அப்படி ஏதும் நடைபெறவில்லை. மாறாக அண்ணாமலை வெளிநாட்டிலிருந்து வந்ததிலிருந்து அதிமுக குறித்து எந்த ஒரு எதிர் மறை கருத்தையும் பேசவில்லை. இது கூட்டணியில் மீண்டும் இனைய வாய்ப்பை தேடுவது போல் உள்ளது என நெட்டிசன்கள் கூறுகின்றனர். இவ்வாறு இருக்கையில் இன்று எம்ஜிஆரின் நினைவு தினத்தை யொட்டி அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எம்ஜிஆர் மற்றும் மோடி இருவரையும் ஒப்பிட்டு கூறியுள்ளார்.
குறிப்பாக எம்ஜிஆர் போல தான் மோடி தனது எளிமையான வாழ்க்கையிலிருந்து தலைவர் ஆனவர், குடும்பத்தை பொறுட்படுத்தாமல் நாட்டுக்காக உழைத்தனர். எம்ஜிஆர் வாழ்க்கை என்பது ஒரு சகாப்தம் என கூறியுள்ளார். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்திருப்பது மீண்டும் அதிமுக- வுடன் கூட்டணியில் இணைய தூண்டில் போடுவது போல் உள்ளது.
சட்டமன்றத் தேர்தல் ஓராண்டு காலத்தில் வரவுள்ள நிலையில் அண்ணாமலையின் இந்த அறிக்கை கூட்டணியின் வியூகத்தை அமைக்க திட்டம் போடுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.