Marxist Communist Party: தமிழ்நாட்டில் தற்போது தான் அதிக ஆணவக் கொலைகள் நடைபெறுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு வைத்திருக்கிறது.
திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜூனா தலித் மக்களை வஞ்சிக்கும் திமுக என நேரடியாக எதிர்த்து காரணமாக அக் கட்சியில் நீக்கப்பட்டு இருக்கிறார். மேலும், கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதி எம்எல்ஏ வேல்முருகன் திமுக அரசு பெஞ்சால் புயல் பதிப்புக்கு சரிவர நிவாரணம் கொடுக்கப்பட வில்லை என கூறி குற்றச்சாட்டுகளை ஊடகங்கள் முன் வைத்தார்.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேசியது திமுகவை சீண்டும் விதமாக இருக்கிறது. அதாவது சமீபத்தில் நாம் தொலைக்காட்சியை நாம் பார்த்தல் ஆணவக்கொலை, தலித் மக்கள் மீது நடத்தப்படும் கொடுமைகள் போன்ற செய்திகளை நாம் பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகி வருகிறோம். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பெரியாரின் 51 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்த முதல்வர் ஸ்டாலின் , துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் வந்தார்கள்.பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கிறார்.
அதன், பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே. பாலகிருஷ்ணன் இந்த பெரியார் இறந்த 52 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் அவரது கொள்கைகளை தமிழகத்தில் கைவிட்டு விட்டார்கள் என்றும் இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிக ஆணவக் கொலைகள் நடைபெறுகிறது. தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து இருக்கிறது என பேசியது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.