அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை!! பாஜக அண்ணாமலை கண்டனம்!!

0
76
A student was sexually harassed in Anna University campus yesterday
A student was sexually harassed in Anna University campus yesterday

Anna University: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று  மாணவிக்கு  பாலியல் தொல்லை அழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு  படிக்கும் மாணவி ஒருவர் நேற்று இரவு உணவு அருந்திய பின் தனது ஆண் நண்பருடன் பேசி கொண்டு இருந்திருக்கிறார். அப்போது அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் அந்த ஆண் நண்பரை அடித்து துரத்தி விட்டு மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

இது தொடர்பாக வெளியான செய்தி தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த மாணவி தனக்கு நேர்ந்ததை  கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகாராக அளித்து இருக்கிறார். எனவே, பல்கலைக்கழகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்கள் பல்கலைக்கழக மாணவர்களா? அல்லது வெளி நபர்களா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

இச் சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், தமிழகத்தில் தற்போது எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் நடந்து வருகிறது.

சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து இருக்கிறது. இது போன்ற குற்றங்களை செய்பவர்களுக்கு அரசாங்கத்தின் மீது எந்தவித பயமும் இல்லாமல் இருக்கிறார்கள். அவர்கள் மீது சரிவர நடவடிக்கைகளை தமிழக அரசு எடுப்பது இல்லை தெரிவித்து இருக்கிறார்.

Previous articleஇவர்களெல்லாம் கிரெடிட் கார்டு வாங்கினால் சிக்கல்!! எச்சரிக்கை விடுத்த ஆனந்த் ஸ்ரீனிவாசன்!!
Next articleஇந்திய அணிக்கு விடாத சனி..கண்டிப்பா அவர் விளையாடுவார்?? இந்திய பவுலர்களின் திட்டம் என்ன??