சென்னை கோட்டூர்புரம் அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி கடந்த 23 ம் தேதி தன்னுடைய ஆண் நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தபோது அங்கு வந்த நபர் ஆண் நண்பரை அடித்து விரட்டி விட்டு அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதை தொடர்ந்து அந்த பெண் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள காவல் நிலையத்தில் அந்த நபர் மீது புகார் அளித்தார்.இதையடுத்து ஞானசேகர் என்பவரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் அண்ணா பல்கலைக்கழகத்தின் பின்புறம் பிரியாணி கடை வைத்திருப்பது தெரியவந்தது.அவருடைய கடையில் தினமும் ரூ.2,000 வருமானம் கிடைக்கிறது என்று கூறியுள்ளார்.
தினமும் கடையில் வியாபாரம் முடிந்த பிறகு பல்கலைக்கழகத்தின் சுவர் ஏறி குதித்து உள்ளே வந்து காதலர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது வீடியோ ஃபோட்டோ எடுத்து அவர்களை மிரட்டி பணம் பறித்தல் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுதல் போன்றவை செய்து வந்துள்ளார்.ஏற்கனவே இது போல் ஒரு பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இந்த பாலியல் அத்துமீறலுக்கு பிறகு பல்கலைக்கழகத்தில் மாலை 6.30 மணிக்கு மேல் வெளியே செல்வதற்கும் தாமதமாக வருவதாக இருந்தால் முன் கூட்டியே அனுமதி பெறவேண்டும் என்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அலுவலர்களுக்கும் புதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.
பல்கலைகழக செக்யூரிட்டிகள் அடையாளஅட்டை கேட்டால் மாணவர்கள் அலுவலக பணியாளர்கள் மற்ற வேலை செய்பவர்கள் காண்பிக்க வேண்டும் என்றும் 6.30 மணிக்கு மேல் வெளியே செல்ல கூடாது என்றும் பல்கலைக்கழகமம் கூறியுள்ளது.