9-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை!! 90 வயதுடைய முதியவரால் நேர்ந்த கொடூரம்!!

0
75
A 90-year-old man sexually harassed a 13-year-old girl
A 90-year-old man sexually harassed a 13-year-old girl

crime: 13 வயது சிறுமிக்கு 90 வயதுடைய முதியவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. வயது வித்தியாசம் இன்றி சிறுமிகள் முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிறார்கள் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. பள்ளி மாணவ மாணவிகள் தங்களுக்கு தெரியாமலே இது போன்ற குற்றங்களில் சிக்கிக் கொள்கிறார்கள்.

 பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு பாலியல் குற்றம் தொடர்பான போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதால் இது போன்ற குற்றங்கள் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.   மயிலை மாவட்டத்தில் இது போன்ற நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியில் 90 வயதுடைய  நாராயணசாமி  என்ற முதியவர் வசித்து வருகிறார்.

இவருக்கு கண்களில் பிரச்சனை உள்ளது அதற்கு மருத்துவமனைக்கு நேற்று முன் தினம் சென்று வந்து இருக்கிறார். வீடிற்கு வந்த உடன் கண்களுக்கு மருந்து ஊற்ற வேண்டும் என்பதற்காக பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் 13 வயதுடைய 9 ஆம் வகுப்பு மாணவியை அழைத்து இருக்கிறார். அந்த சிறுமி முதியவர் வீட்டிற்கு சென்று இருக்கிறார். அப்போது அந்த முதியவர் அச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி முதியவர் நாராயணசாமி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை தனது பெற்றோரிடம் தெரிவித்து இருக்கிறார். அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்கள் எனவே போக்சோ சட்டத்தின் கீழ் முதியவர் நாராயணசாமியை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து இருக்கிறார்கள்.

Previous articleஏமாற்றிய நம்பிக்கை நாயகன்!! தட்டி தூக்கிய கம்மின்ஸ்..பாக்சிங் டே டெஸ்ட் போட்டி!!
Next articleஇந்திய அணி மீது அக்கறை இல்லை..வந்த வேகத்தில் திரும்பிய ரோஹித்!! கோபத்தின் உச்சத்தில் ரசிகர்கள்!!