Israel – Gaza War: இஸ்ரேல் ராக்கெட் தாக்குதலில் காசா பத்திரிக்கையாளர்கள் 5 பேர் உட்பட 141 நபர்கள் பலியான சோகம்.
இரண்டாம் உலகப் போரின் பொது பாலஸ்தீனத்தில் யூதர்கள் குடியேற்றத்தால் இஸ்ரேல் என்ற தனி நாடு உருவாகியது. பாலஸ்தீன பூர்வீக குடி மக்களுக்கு இஸ்ரேல் நாட்டினருக்கும் இடையே நடக்கும் போராட்டம் நாளடைவில் போராக மாறியுள்ளது. இஸ்ரேல் இராணுவத்தினருக்கு எதிராக பாலஸ்தீனம் காசா மற்றும் லெபனானில் கிளர்ச்சிக் குழுக்களின் போரை நடத்தி வருகிறார்கள்.
பாலஸ்தீன விடுதலை பெற ஹமாஸ் அமைப்பினர் தொடர் தாக்குதலை இஸ்ரேலுக்கு எதிராக நடத்தி வருகிறார்கள் இந்த போர் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் போர் முடிவுக்கு வரவில்லை. இந்த போரில் இது வரை சுமார் 45,000 மக்கள் உயிரிழந்து இருக்கிறார்கள். காஸாவில் இமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக அமெரிக்க உதவிகளை செய்து வருகிறது.
எனவே தொடர்ந்து இஸ்ரேல் மீது கிளர்ச்சியாளர்கள் குழு போராட்டம் நடத்த முடிகிறது. இந்த நிலையில் நேற்று மருத்துவமனையை குறிவைத்து இஸ்ரேல் ராக்கெட் தாக்குதலை நடத்தியது இதில் 141 பேர் இதுவரை பலியாகி இருக்கிறார்கள். அவர்கள் அப்பாவி பொதுமக்கள் என்றும் பாலஸ்தீன சுகாதாரத் துறை அறிவித்து இருக்கிறது.
மேலும், இந்த மருத்துவமனைக்கு வெளியே ஊடகவியலாளர்களின் வாகனத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதில் 5 ஊடகவியாளர்கள் பலியாகி இருக்கிறார்கள். இதற்கு மறுப்பு தெரிவித்த இஸ்ரேல் பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் போராளிக் குழுக்கள் மீதுதான் தாக்குதலை நடத்தி உள்ளோம் என கூறி வருகிறது.