crime: திருமணம் என்ற பெயரில் பணத்தை திருடிச் செல்லும் மோசடி கும்பல் கைது.
தற்போது உள்ள சூழ்நிலையில் ஆண்களுக்கு திருமணம் ஆவதில் கால தாமதம் ஆகிக்கொண்டே இருக்கிறது. பெற்றோர்கள் தங்களது மகன், மகளுக்கு திருமணம் செய்ய வரன்கள் சரிவர அமையவில்லை என கவலைப்பட்டு வருகிறார்கள். இதை சாதகமாக பயன்படுத்தி பண மோசடி செய்த கும்பல் உத்திர பிரதேச போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
அதாவது, உத்திரப் பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் உபாத்யாயா என்ற இளைஞர் திருமணம் செய்து கொள்வதற்காக மணப்பெண் தேடி வந்து இருக்கிறார். அப்போது, விமலேஷ் வர்மா என்ற திருமண வரன் தரகர் அவருக்கு பூனம் என்ற பெண்ணை திருமணம் செய்ய புகைப்படத்தை காண்பித்து இருக்கிறார். மேலும், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஒரு லட்சம் செலவு ஆகும் என அவர் கூறி இருக்கிறார்.
அதற்கு சம்மதம் தெரிவித்த நிலையில், சங்கரிடம் பூனம் மற்றும் அவரது தாயார் சஞ்சனா குப்தா அறிமுகம் படுத்தி இருக்கிறார்கள். சஞ்சனா குப்தா சங்கரிடம் திருமணம் செய்ய முன் பணம் கேட்டு இருக்கிறார். இதில் சந்தேகம் அடைந்த சங்கர் பணம் தர வேண்டும் என்றால், பூனம் மற்றும் சஞ்சனா குப்தாவின் ஆதார் கார்டு மற்றும் முக்கிய ஆவணங்களை கேட்ட நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.
அதனால் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என சங்கர் மறுத்தார். பணம் தராவிட்டால் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல்துறையில் புகார் அளிக்க உள்ளதாக சஞ்சனா தரப்பில் கூறப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சங்கர் உடனடியாக போலீசாரிடம் புகார் அளித்து இருக்கிறார்கள். சங்கரின் புகாரின் பெயரில் போலீசார் தீவர விசாரணையில் ஈடுபட்டு இருக்கிறர்கள்.
விசாரணை முடிவில், பூனம் இது வரை 6 திருமணம் செய்து முதலிரவு முடிந்த பிறகு பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்று இருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், பூனம் மகளாகவும், சஞ்சனா குப்தா தாயக நடித்து இந்த மோசடியில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என தெரிய வந்துள்ளது.