Pakistan:ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
ஆப்கானிஸ்தானில் கடந்த 2020 ஆம் ஆண்டு உள்நாட்டு போர் நடைபெற்றது. ஆப்கானிய அரசுக்கும் தாலிபான்களுக்கும் இடையிலான போராக இருந்தது. இந்த போரில் ஆப்கானிய அரசின் ஆட்சி கடந்த 2021 ஆம் ஆண்டு கவிழ்க்கப்பட்டு தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினார்கள். ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி அமைத்ததை உலக நாடுகள் அங்கீகரிக்க படவில்லை.
இருந்த போதிலும் ஆப்கானிஸ்தானின் அண்டை நாடான பாகிஸ்தான் தலிபான் அரசுக்கு ஆதரவு கொடுத்து. இந்த நிலையில் சமீப காலமாக இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையில் மோதல் போக்கு நிலவி வருகிறது. அதாவது, ஆப்கானிஸ்தானில் உள்ள டிடிபி எனும் தெஹ்ரீக் ஐ தாலிபான் அமைப்பு பாகிஸ்தான் மீது தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்த அமைப்பின் நோக்கமாக பாகிஸ்தானில் தாலிபான் ஆட்சி அமைப்பது தான். தெஹ்ரீக் ஐ தாலிபான் அமைப்புக்கு எதிரான தாக்குதலில் சீன மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்த இருக்கிறார்கள். எதிர் தாக்குதல் நடத்தும் விதமாக பாகிஸ்தான் ராணுவ விமானங்கள் வான்வழியாக ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லைக்குள் தெஹ்ரீக் ஐ தாலிபான் அமைப்பினர் முகாம்கள் மீது தாக்குதலை நடத்தியது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 15 ஆயிரம் தாலிபான்கள் வீரர்கள் பாகிஸ்தான் எல்லையில் கூடி இருக்கிறார்கள். எனவே தெஹ்ரீக் ஐ தாலிபான் அமைப்பினரை தடுத்து நிறுத்த வேண்டும் என பாகிஸ்தான் அரசு ஆப்கானிஸ்தானுக்கு கோரிக்கை வைத்து இருக்கிறது.