Sivagangai District: அழுகிய சடலத்துடன் ஒரே வீட்டில் பெண் வசித்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் முஸ்லிம் நடுத்தெருவை சேர்ந்தவர் ஆதி ரத்தின மூர்த்தி. இவர் பரிமளா என்ற பெண்ணை திருமணம் செய்து இருக்கிறார். இப் பெண் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இத் தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை. கணவர் மனைவி இருவரும் முஸ்லிம் நடுத்தெருவில் ஒரு வீட்டில் வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஆத்திரத்தின மூர்த்தியின் வீடு கடந்த மூன்று நாட்களாக பூட்டி இருந்து இருக்கிறது. இருந்த போதிலும் அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கி இருக்கிறது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்து இருக்கிறார்கள். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பூட்டிய வீட்டை திறந்து இருக்கிறார்கள்.
அப்போது, ஆதி ரத்தின மூர்த்தி இறந்த அழுகிய சடலமாக கட்டிலில் கிடந்து இருக்கிறார். அவரது உடலி மீட்டு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்து இருக்கிறார்கள். போலீசார் விசாரித்ததில் கடந்த ஆறு மாத கலங்கலாக ஆதி ரத்தின மூர்த்தி உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தது தெரிய வந்துள்ளது.
அவரது மனைவி பரிமளா மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் கணவர் இறந்து இருப்பது கூட தெரியாமல் மூன்று நாட்களாக இறந்த சடலத்துடன் வீட்டிலே தங்கி சமைத்து வாழ்ந்து இருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. கணவரின் இறந்த சடலத்துடன் மூன்று நாட்கள் மனைவி தங்கி இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.