tvk: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சந்தித்து இருக்கிறார்.
கடந்த 23 ஆம் தேதி அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்ற சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து அவ் வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டு இருக்கும் ஞானசேகரன் திமுக கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருக்கிறார் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் fir காப்பி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கண்டம் தெரிவித்து பாஜக அண்ணாமலை சாட்டையடி போராட்டத்தை கையில் எடுத்தார். அதிமுகவினர் ஆளும் அரசை கண்டித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். தவெக விஜய் அவர்கள் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்தளத்தில் எதிர்ப்புகளை தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று தமிழக மக்களுக்கு கடிதம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். மேலும், ஆளுநரை சந்தித்த அவர் கோரிக்கையை வைத்து இருக்கிறார். அதில், தமிழகத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் முறையாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்கு நிவாரணமாக தமிழக அரசு கேட்ட தொகையை மத்திய அரசு கொடுக்க வேண்டும் எனக் கூறி இருக்கிறார்.
இன்று, மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தை ஆய்வு செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் மகளிர் ஆணையத்தினர் செல்ல இருக்கிறார்கள். இந்த நிலையில் பாஜக ஆதரவாளர்கள் ஆளுநர் ஆர். என்.ரவியை சந்திப்பார்கள் என்ற கருது சமூக வலைதளத்தில் பேசப்பட்டு வருகிறது.