South Korea: தென்கொரிய அதிபர் யூன் ஆட்சியில் இருந்து விலகும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது.
இரண்டாம் உலகப் போர் காலக் கட்டத்தில் கொரியா நாடு ஒரே நாடாக தான் இருந்து. அப் போரில் ரஷ்யா கைப்பற்றிய பகுதிகள் வட கொரியாவும், அமெரிக்க ராணுவம் கைப்பற்றிய பகுதிகள் தற்போது தென் கொரியாவும் பிரிந்து இரண்டு நாடுகளாக உள்ளன. கடுமையான கட்டுப்பாடுகளை கொண்ட நாடாக உலக அளவில் பேசப்படும் நாடு வட கொரியா.
நாட்டு மக்களுக்கு விதிக்கப்பட்ட கடுமையான சட்ட திட்டங்களுக்கு பெயர் போன நாடு. எப்போது வடகொரியா பற்றிய செய்திகள் தான் சர்வதேச ஊடகங்களில் அதிக அளவில் பேசப்படும். இந்த நிலையில் சமீப காலமாக தென் கொரியாவில் நிலவும் அரசியல் சூழ் அனைத்து நாடுகளும் கவனத்தை ஈர்த்துள்ளது. தென் கொரியா ஒரு மக்களாட்சி ஜனநாயக நாடு ஆகும்.
வட கொரியாவை போல ராணுவ ஆட்சி இங்கு நடைபெறுவது இல்லை. தென் கொரியாவின் அதிபராக யூன் இருக்கிறார். சமீப காலத்திற்கு முன் இரவோடு இரவாக அந்த நாட்டில் ராணுவ சட்டத்தை அமல் படுத்தி இருந்தார். அதாவது, தென் கொரியாவில் இருக்கும் வட கொரியா ஆதரவாளர்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை என அறிவித்து இருந்தார்.
அந்த நாட்டில் ராணுவ சட்டம் அமலுக்கு வந்ததால் சமூக பொது வெளியில் மக்கள் ஒன்று கூடக் கூடாது, பத்திரிகையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் எதிர்ப்புக்கு பிறகு அந்த நாட்டில் ராணுவ சட்ட நடைமுறை நீக்கினார் அதிபர் யூன்.
தென் கொரிய மக்கள் அதிபர் யூன்-னை ஆட்சியில் இருந்து நீக்க தற்போது வாக்கெடுப்புகள் நடத்தி வருகிறார்கள். அதிபர் யூன் ஆட்சி பொறுப்பில் இருந்து விலகும் சூழலால் ஏற்பட்டு இருக்கிறது.