TANGEDCO: ஸ்மார்ட் மீட்டர் வைப்பது குறித்து மின்சாரவாரியம் அதானி குழுமம் டெண்டரை ரத்து செய்துள்ளது.
அதானி குழுமத்தின் மீது அமெரிக்காவில் ஊழல் வழக்கு போடப்பட்டு பெரும் சர்ச்சைக்குரிய விதமாக மாறியது. குறிப்பாக இதில் தமிழக அரசின் பெயர் இடம் பெற்றது எனத் தொடங்கி அதன் குழுமத் தலைவர் கெளதம் அதானி ஸ்டாலினை வீட்டில் சந்தித்தது வரை அடுத்தடுத்து புரியா புதிராகவே இருந்தது. இவ்வாறு இருக்கையில் அதானியின் டெண்டர் ஒன்றை தற்பொழுது ரத்து செய்து தமிழக மின்வாரியமானது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதாவது அனைத்து வீடுகளிலும் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மின்வாரிய நிர்வாகிகள் வீடுதோறும் சென்று மின்சார கணக்கீட்டு முறையை செய்து வருவர். ஆனால் இந்த ஸ்மார்ட் மீட்டர் வந்தால் வீடுதோறும் சென்று கணக்கீட்டை எடுக்க தேவையில்லை. அவரவர் அலுவலகத்திலிருந்தே ஒவ்வொரு வீட்டிற்கான மின்சாரம் பயன்படுத்திய விகிதத்தை துல்லியமாக கணக்கீட முடியும்.
இதுகுறித்து டெண்டர் கூறும் பொழுது கிட்டத்தட்ட 4 நிறுவனங்கள் தங்களது தொகையை தெரிவித்ததில், அதானி குழுமம் குறைத்து மதிப்பிட்டு கூறியிருந்தது. ஆனால் அது தமிழக அரசு நிர்ணயித்த தொகையை காட்டிலும் சற்று அதிகமென்பதால் அந்த டெண்டரை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.
இதற்கு மத்திய அரசும் ரூ 19 ஆயிரம் கோடியைநிதி உதவியாக தரவும் உள்ளது. இருப்பினும் 3 கோடி மின் நுகர்வோருக்கு மட்டும் வழங்க இருப்பதால், முதலில் 8 மாவட்டங்களில் உள்ள வீடுகளுக்கு வழங்க டெண்டர் விடப்பட்டது. அதன் தொகை தமிழக அரசு நிர்ணயித்ததை விட அதிகமாக இருந்ததால் தற்சமயம் அதனை ரத்து செய்துள்ளனர்.