Ethiopia: சரக்கு வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 71 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சோகம்.
ஆப்பிரிக்காவின் கிழக்கு பகுதியில் உள்ள நாடு எத்தியோப்பியா. இந்த நாட்டில் திருமண நிகழ்ச்சிக்கு செல்ல ஒரே கிராமத்தை சேர்ந்த பல பேர் சரக்கு வாகனத்தை வாடகைக்கு எடுத்து சென்று இருக்கிறார்கள். அந்த வாகனம் மிகவும் பழையதாக இருந்து இருக்கிறது இருப்பினும் அளவுக்கு அதிகமான நபர்கள் அந்த வாகனத்தில் பயன் செய்து இருக்கிறார்கள்.
கிராம மக்களை ஏற்றிச் சென்ற வானகம் சிடமாக தலைநகர் அடிஸ் அபாபா என்ற பகுதிக்கு அருகில் உள்ள ஆற்றை கடந்து இருக்கிறது. அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் ஆற்றின் நடுவே இருக்கும் தடுப்பு சுவர்களை இடித்து கொண்டு தலைகுப்புற ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இத் தகவல் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு கொடுக்கப்பட்டது.
ஆற்றின் அருகில் இருக்கும் கிராம மக்கள் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகிறார்கள். இந்த விபத்தில் சுமார் 71 பேர் பரிதாபமாக பலியாகி இருக்கிறார்கள். எனவே, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் பாலத்தில் இருந்து விழுந்த சரக்கு வாகனம் ஆற்றில் இருந்த பெரிய பாறையில் விழுந்தது தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்கிறது என தெரிய வந்துள்ளது.
மேலும், அப்பகுதியில் சாலைகள் மிக மோசமாக உள்ளது. அதை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள். குறிப்பாக ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகள் மிகவும் பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கிறது. பழைய வாகனங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.