NTK: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
கடந்த டிசம்பர் 23 ஆம் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட குற்றவாளி ஞானசேகரன் திமுக கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும், ஞானசேகரன் திமுகவில் முக்கிய நிர்வாகிகள் உடன் புகைப்படம் எடுத்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, திமுக அரசை கண்டித்து தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினார்கள். அதிமுக, பாஜக, தவெக போன்ற கட்சிகள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியினர் (31.12.24) அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த காவல்துறையினரிடம் அனுமதி கேட்டு இருந்தார்கள்.
அதற்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அதனை மீறி நாம் தமிழர் கட்சியினர் அப் பகுதியில் கூடி போராட்டம் நடத்தினார்கள். அவர்களை காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள். அப்போது காரில் வந்த சீமான் காரை விட்டு கீழே இறங்கிய போது காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்து இருக்கிறார்கள்.
இதனால் நாம் தமிழர் கட்சியினருக்கு போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு இருக்கிறது. நேற்று, தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்கள் விஜய் தமிழக மக்களுக்கு எழுதிய கடித்ததை விநியோகம் செய்ததற்கு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.