ADMK BJP: அதிமுக-வுடன் மீண்டும் கூட்டணி வைக்க அண்ணாமலைக்கு அமித்ஷா அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
அண்ணாமலை அமெரிக்காவில் தனது படிப்பை முடித்து வந்ததிலிருந்து தனது செயல்களில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளார். அமெரிக்கா செல்வதற்கு முன் கீரியும் பாம்பாக இருந்த அதிமுகவும் பாஜக- வும் தற்பொழுது சமரசம் அடையப்போவதாக தெரிகிறது. அதிமுகவை எதற்கெடுத்தாலும் குறை சொல்லி கண்டனம் தெரிவித்து வந்த அண்ணாமலை தற்பொழுது சைலன்ட் மோட் ஆகிவிட்டார்.
இதற்கு முக்கிய காரணம் டெல்லி மேலிடம்தான் என்கின்றனர். சில தினங்களுக்கு முன்பு அண்ணாமலை அமித்ஷாவை சந்தித்து வந்ததிலிருந்து இவரது நடவடிக்கை முற்றிலும் மாறியுள்ளது. அமித்ஷா கூட்டணி குறித்து முக்கிய அறிவுரையை அண்ணாமலையிடம் எடுத்துக் கூறி அனுப்பியுள்ளாராம். அதாவது, தமிழகத்தில் நாம் காலூன்ற வேண்டுமென்றால் கூட்டணி என்பது அவசியம், அதற்காக வருபவரை அவதூறாக பேசி திருப்பி அனுப்பக் கூடாது.
வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைக்க முயல வேண்டுமென்று கூறியுள்ளார். இதற்கு அண்ணாமலை தலையாட்டிவிட்டு தான் தற்பொழுது தமிழகத்தில் அதிமுக குறித்து எந்த ஒரு பேச்சையும் எடுப்பதே இல்லையாம். சமீபத்தில் கூட எம்ஜிஆர் நினைவு நாள் என தொடங்கி தற்பொழுது பரபரப்பாக இருக்கும் அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் வன்கொடுமை ரீதியாக அதிமுக போராட்டம் செய்தது வரை அனைத்திற்கும் பாராட்டு தெரிவித்துள்ளது.
இது குறித்து எடப்பாடி- யிடம் கேட்ட பொழுது கூட அவர்தான் பாராட்டி விட்டாரே என்று சிரித்தபடி பதிலளித்தார். இவை அனைத்தும் 2026 ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக்கு வழிவகுக்கும் என்பது அப்பட்டமாக தெரிய வருகிறது.