மீண்டும் மீண்டும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை உடைக்கும் விடாமுயற்சி!! வெளிவராது என அறிவித்த தயாரிப்பு நிறுவனம்!!

Photo of author

By Gayathri

“பொதுவாகவே ‘பொங்கல்’ விழாவின் போது ‘பிரபல நடிகர்களின்’ படமானது வெளியாகும். ஏனெனில் பொங்கல் விடுமுறை நான்கு நாட்கள் தொடர்ச்சியாக வரும். இதனால் ரசிகர்களும் மிகுந்த சந்தோஷத்தில் இருப்பார்கள். அதன்படி, ‘இந்த வருட பொங்கல் ரிலிஸுக்காக தயார் செய்து கொண்டிருந்த திரைபடம் தான் ‘விடா முயற்சி’. மேலும் ‘அஜித் படம் வெளியாகி இரண்டு வருடங்கள் ஆன நிலையில், அவரின் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்’. இந்த படம் தயாரிப்பாளரான, ‘லைக்கா நிறுவனத்திற்கும், ஏ.கேவிற்கும் இடையே ஏற்கனவே சர்ச்சை நடந்தது’ குறிப்பிடத்தக்கது.

அதன் பின் சமாதானம் ஆனப் பின்னர் தான் ‘இந்த பட இறுதி பாகம் எடுக்கப்பட்டது’. மேலும் இந்த படம், ‘போன வருடம் தீபாவளிக்கே வெளியாகும்’ என கூறப்பட்டிருந்தது. அதன் பின் தயாரிப்பு நிறுவனம், ‘ரிலீஸ் தேதியை ஒத்திவைத்ததாக தெரிவித்தது’. அதன்பின் எழுந்த தொடர் விமர்சனத்தை அடுத்து ‘இந்தப் பட டீசர் வெளியீட்டில் பொங்கலுக்கு வெளியாகும்’ என தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது”.

“தற்சமயம் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த லைக்கா நிறுவனம், அதனுடன் அஜித் ரசிகர்களுக்கு ஒரு பேரதிர்ச்சியான தகவலை கூறியுள்ளது’. அதில், ‘இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்’. “சில தவிர்க்க முடியாத காரணங்களால் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலின் போது வெளிவராது” என ஏகே ரசிகர்கள் தலையில் இடியை போட்டது. இது தற்போது வலைதளங்களில் பெரிதும் பகிரப்பட்டு வருகிறது.