O. Panneerselvam: விஜய் உடன் கூட்டணி குறித்து பேசி இருக்கிறார் ஓபிஎஸ்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுக தொண்டர்கள் மீட்பு குழு தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் விஜய் உடன் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது, அதிமுக கட்சியின் பொது செயலாளர் பதவி எடப்பாடி பழனிசாமியின் வசம் உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ஓபிஎஸ் அதிமுக கட்சியில் இருந்து விலகினார். நடந்து முடிந்த மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணியில் தனியாக தேர்தலில் போட்டி போட்டு இருந்தார். அதிமுக தொடர் தேர்தல் தோல்விக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி ஆகிய இருவரும் பிரிந்தது தான் காரணம் எனக் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
ஓ.பன்னீர்செல்வம் மதுரையில் இருந்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்த போது செய்தியாளர்களை சந்தித்து பேசி இருந்தார். அப்போது, நான் அதிமுகவில் இருந்து வெளியேறியது விதி மீறல், அதிமுக தொண்டர்களுக்கு உரிமைகளை வகுத்து இருக்கிறார் அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர். விரைவில் இரட்டை இலை வழக்கில் தீர்ப்பு வரும் பொருது இருந்து பாருங்கள் என்று கூறினார்.
மேலும், செய்தியாளர் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தவெக கட்சியுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு செய்தியாளர்களை பார்த்து கொக்கிப் போடாதீங்க என நகைச்சுவையாக பதில் அளித்து சென்றார்.