அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு.. திமுக பாஜக எல்லாமே இதில் ஒன்னு தான் – குஷ்பு பரபர பேட்டி!!

Photo of author

By Rupa

BJP: அண்ணா பல்கலைக்கழக பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கை அரசியல் படுத்தாமல் நீதி வழங்குமாறு பேட்டி அளித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக விவகாரமானது தற்பொழுது பூதாகரமாக வெடிக்க தொடங்கியுள்ளது. பாலியல் ரீதியான எஃப் ஐ ஆர் ஆனது வெளியிடக் கூடாது என்ற விதிமுறை இருக்கும் பொழுது இந்த பெண்ணின் வழக்கு மட்டும் எப்படி வெளியே வந்தது? அதேபோல ஞானசேகரன் மீது முன்னதாகவே பல வழக்குகள் குவிந்த நிலையில் அடுத்தடுத்து தொடர்ந்து அவரை வெளியே கொண்டு வர உதவுபவர் யார்?? என்று பல கேள்விகளை மாற்றுக் கட்சி யினர் முன்வைத்து வருகின்றனர்.

அந்த வகையில் குஷ்பூ இன்று பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை நடத்தினார். அதில், பாதிக்கப்பட்ட பெண் எந்த அளவிற்கு பயந்து இருப்பார், ஒரு ஆளை பார்த்தால் கூட தற்பொழுது பயம் உண்டாகக்கூடும் மேற்கொண்டு அவரது குடும்பமும் மிகுந்த பாதிப்பு இருக்கும். இந்த பெண்ணுக்கு நடந்தவாறு மேற்கொண்டு யாருக்கும் நடக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் முன்னதாகவே பாலியல் சீண்டல் செய்த நபர் மீது எண்ணற்ற வழக்குகள் இருந்த பொழுது எப்படி சுதந்திரமாக நடமாட முடிந்தது. இதற்கு முக்கிய காரணம் சட்டம் ஒழுங்கற்று இருப்பது தான்.

குற்றவாளியான ஞானசேகரன் குறிப்பிட்ட கட்சியைச் சார்ந்தவர் என்று கூறுகின்றனர், ஆனால் நானே தற்பொழுது பாஜாக சார்பாக பேச முன்வரவில்லை. பெண்ணின் விவகாரத்தை அரசியல் ஆக்காமல் அவருக்கு தேவையான நியதி கிடைக்க வேண்டும். அதேபோல எஃப் ஐ ஆர் கசிவு குறித்து தற்போது வரை எந்த ஒரு அறிவிப்பும் இல்லை.

இந்த பெண்ணின் விவகாரத்தை ஒவ்வொரு கட்சிகளும் குறிப்பாக பாஜக உட்பட அரசியலாக்கி பந்தை போல் இங்கு அங்கும் தூக்கி எரிகிறார்கள். இது பெண்களை அவமதிப்பிற்கு உண்டாகும் ஒரு செயல். இவ்வாறு செய்யாமல் இதனை அரசியல் படுத்தாமல் இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.