PMK DMK: ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கிடைக்க கலைஞரிடம் பரிந்துரை செய்ததாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
புத்தாண்டு முன்னிட்டு பாமக சார்பாக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தந்தை மகன் என இருவருக்கும் வார்த்தை போரானது காரசாரமாக நடைபெற்றது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டாலும் இளைஞர் அணி குடும்ப உறுப்பினருக்கு வழங்க வேண்டுமா என்பது தான் இங்கு பெரிய கேள்வியாக அமைந்தது. இந்த விவகாரம் நடந்த மறுநாளே தைலாபுரம் தோட்டத்தில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.
இதன் இறுதி கட்டமாக சமரச பேச்சில் முகுந்தன் இளைஞர் அணி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திமுக ஆட்சியின் பொழுது ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தார் அச்சமயத்தில் பொதுக்குழு கூட்டம் ஒன்றில் தம்பி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுங்கள் என்று நான்தான் பரிந்துரை செய்திருந்தேன். இதை ஸ்டாலின் கூட கூறுவார் என தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக பாமக மூத்த நிர்வாகிகள் திமுக பக்கம் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால் அவர்களுடன் கூட்டணி வைக்க அன்புமணிக்கு துளி கூட விருப்பமில்லை. இது குறித்தும் உட்கட்சிப் பூசல் இருந்து தான் வருகிறது. இதனையெல்லாம் பொருட்படுத்தாமல் திமுக ஒரேடியாக அதானி பிரச்சனையில் ராமதாஸ் கட்சியின் மூத்த நிர்வாகி என்று கூட பார்க்காமல் அவருக்கு வேறு வேலையே இல்லை என்று மதிப்பற்று பேசியிருப்பார்.
ஆனால் ராமதாஸ் இன்று ஸ்டாலினை உறவு முறையுடன் கூறுவது இவரின் பெருந்தன்மையை காட்டுகிறது.