திரைத்துறை என்று வந்து விட்டாலே பலரும் பல விஷயங்களை தினந்தோறும் கற்றுக் கொள்ளும் நிலையில், கங்கை அமரன் அவர்களும் அவ்வாறு தன் வாழ்வில் படிப்படியாக இசை பாடல் வரிகள் திரைக்கதை இயக்கம் நடிப்பு என அனைத்தையும் ஒன்று சேர்த்து தன்னகத்தே கொண்டுவராக விளங்கி வருகிறார். அப்படிப்பட்ட கங்கை அமரன் அவர்கள் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியிருக்கிறார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கங்கை அமரன் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியதாவது :-
இப்பொழுது உள்ள திரைப்படங்களில் எல்லாம் கதை என்பதே இல்லாமல் போய்விட்டதாக வருத்தம் தெரிவித்திருக்கிறார். அப்பொழுது உள்ள படங்கள் கதைகளுக்காகவே நீண்ட நாட்கள் ஓடின என்றும் இப்பொழுது உள்ள படங்களில் சண்டை காட்சிகள் மட்டுமே பெரிதலும் இடம்பெற்று இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து அரசியலை குறித்தும் பேசியவர், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் , இங்கு அதிக அளவில் பாலியல் வன்கொடுமை நடைபெறுவதாகவும் போதை மற்றும் மது கலாச்சாரம் அதிக அளவில் நடைமுறையில் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
மேலும், சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் ஆகியும் பட்டியல் இன மக்களுக்கு இன்று வரையில் சுதந்திரம் என்பது கிடைக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். நடிகர் விஜய் அவர்கள் அரசியலுக்கு வந்தது வரவேற்கத்தக்கது. மக்களைப் போலவே நானும் அவர் மக்களுக்காக என்ன செய்யப் போகிறார் என்பதை காண ஆவலாக இருக்கிறேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.
குறிப்பாக வேங்கை வயல் சம்பவம் மற்றும் நாடாளுமன்றத்தில் அமிக்ஷா அவர்கள் பேசிய பேச்சு குறித்தும் தன்னுடைய கருத்தை பதிவிட்ட கங்கை அமரன் அவர்கள், அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் மதுவை ஒழிப்போம் என்று தேர்தல் வாக்குறுதிகளை அளித்த முதல்வர் ஆட்சிக்கு வந்த பின்பு மௌனம் சாதித்து வருகிறார் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். இவை மட்டுமின்றி தற்பொழுது மிகப் பெரிய பேச்சு பொருளாக மக்களை கோபமடைய செய்து கொண்டிருக்கும் அண்ணா பல்கலைக்கழக பிரச்சனையிலும் குற்றவாளி யார் என தெரிந்தும் ஏன் தமிழக அரசு இவ்வாறு செய்கிறது என்று தெரியவில்லை என்றும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.