DMK BJP: பாஜக அண்ணாமலை நடத்தும் நீதி கேட்பு பேரணிக்கு காலவ்துறை அனுமதிக்காத நிலையில் அவரை கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை கண்டிக்கும் வகையில் அதிமுக பாமக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக போராட்டம் நடத்துபவர்களை போலீசார் கைது செய்கின்றனர். இவ்வாறு இருக்கையில் பாஜக சார்பாக அண்ணாமலை நீதி கேட்பு பேரணி நடத்துவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இந்த பேரணியானது இன்று சென்னையில் தொடங்கி மதுரை வரை நடைபெற உள்ளது.
இதில் மாணவிக்கு நீதி வாங்க வேண்டி பல்வேறு சகோதரிகள் கலந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் மதுரை காவல் துறை இதற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளது. முன்னதாகவே சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த நிலையில் மதுரையில் நடைபெறும் பேரணிக்கு முன்னெச்சரிக்கை கொடுத்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டால் கட்டாயம் கைது செய்யப்படும் என்று எச்சரித்துள்ளனர். இதை மீறி கட்டாயம், இன்று பாஜக அண்ணாமலை போராட்ட களத்தில் இறங்கும் பொழுது கைது செய்யப்படுவார். இந்த நீதி கேட்பு பேரணியானது முழுமையாக நடைபெற்று முடியுமா என்பது சந்தேகத்திற்குரியதுதான்.