சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன்களான நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் மீது சொத்து தொடர்பாக அவர்களுடைய சகோதரிகளான சாந்தி மற்றும் தேன்மொழி இருவரும் சில வருடங்களுக்கு முன்பு வழக்கு தொடர்ந்தனர். இப்பொழுது இந்த வழக்கானது நீண்ட பேச்சு வார்த்தைக்கு பின் முடிவுக்கு வந்திருக்கிறது.
சென்னையில் உள்ள தி நகரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தில் இவருடைய மகன்கள் மற்றும் சகோதரர்களான தங்க வேலு சண்முகம் மற்றும் தங்கை பத்மாவதி என அனைவரும் சேர்ந்து கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். சிவாஜியின் மகள்கள் இருவரும் திருமணம் ஆகிய நிலையில் வேறொரு வீட்டிற்கு சென்று விட்டதால் தந்தை வீட்டிற்கு வருவது குறைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் அண்ணன்கள் இருவரும் சேர்ந்து, எங்களுடைய தந்தையின் உழைப்பில் சம்பாதித்த 270 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முறையாக நிர்வாகிகள் என்ற குற்றச்சாட்டை வைத்தது மட்டுமல்லாத வீடுகளின் வாடகை பங்கையும் எங்களுக்கு தராமல் ஏமாற்றி விட்டனர் என்று தெரிவித்திருக்கின்றனர்.
மேலும், தங்களுடைய தந்தை சம்பாதித்து சேர்த்திய 1000 பவுன் தங்க நகைகளையும் 500 கிலோ வெள்ளி பொருட்களையும் தங்களுடைய சகோதரர்களான ராம்குமாரும் பிரபுவும் அபகரித்துக் கொண்டதாகவும் குற்றம் சாட்டியிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக தங்களுடைய தந்தை சம்பாதித்த பணத்தில் வாங்கிய சொத்துக்கள் என்பதால் இவை அனைத்திலும் எங்களுக்கு பங்கு வழங்க வேண்டும் என்று இவர்கள் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
தற்பொழுது இந்த வழக்கானது பல ஆண்டுகளுக்குப் பின் பேச்சு வார்த்தையின் மூலம் சில சொத்துக்களை சாந்தி மற்றும் தேன்மொழியாகிய இரண்டு சகோதரிகளுக்கும் கொடுக்க முன் வந்திருக்கின்றனர். அதிலும் குறிப்பாக சிவாஜி பிலிம்ஸ் எதிரே இருக்கக்கூடிய இடத்தை இவர்கள் இருவருக்கும் சரி பாதியாக பிரித்துக் கொள்ளும்படியும் முடிவு செய்துள்ளனர்.
இதன் பின்பு நடிக்க சிவாஜி கணேசனின் குடும்பத்தில் சொத்து பிரச்சனை இருக்காது என்றும் வரும் காலத்தில் சொத்து பிரச்சனை வரக்கூடாது என்றும் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.