ஆட்டோகிராப் திரைப்படம் எடுக்கப்பட்ட கால சூழலில் தனக்கும் ஆட்டோகிராப் திரைப்படத்தின் இயக்குனரான சேரன் அவர்களுக்கும் நிகழ்ந்த கசப்பான சம்பவம் குறித்து மனம் திறந்து இருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.
பொதுவாக படப்பிடிப்பு தளங்களில் இயக்குனருக்கு கோபம் வந்தால் அதை உதவி இயக்குனரிடம் காட்டுவார். உதவி இயக்குனர்கள் அவர்களின் கீழ் பணிபுரியக்கூடியவர்கள் அல்லது டிரைவர்கள் போன்றவர்களை திட்டுவர். அப்படியாக ஒவ்வொருவரும் கோபத்தை தங்களின் கீழ் உள்ளவர்களிடம் காட்டுவது இந்த துறையில் வழக்கமான ஒன்றாகவே அமைந்தது.
அப்படியாக நடிகை சினேகா அவர்கள் ஒரு நாள் படப்பிடிப்பு தளத்தில் இருந்த பொழுது அவருடைய டிரைவரிடம் பாண்டிராஜ் அவர்கள் கோபமாக நடந்து கொண்டதாக நடிகை சினேகா இயக்குனர் சேரனிடம் கூற, அவர் படப்பிடிப்பு தளத்தில் அனைவரது முன்னிலையிலும் உதவி இயக்குனராக அப்பொழுது பணிபுரிந்து கொண்டிருந்த பாண்டிராஜ் அவர்களை கடுமையாக திட்டி இருக்கிறார்.
அதற்கு முன் வரை பாண்டிராஜ் மற்றும் சேரன் ஆகிய இருவருக்கும் திரைக்கதையில் மிகுந்த ஒற்றுமை மற்றும் இருவருக்கு இடையிலும் நல்ல நட்பும் பாராட்டப்பட்டு வந்த நிலையில், நடிகை சினேகாவின் மூலம் இந்த பிரிவானது ஏற்பட்டதாக பாண்டிராஜ் அவர்கள் பேட்டிய ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
சேரனுடன் ஆட்டோகிராப் படத்திலிருந்து விலகிய பின்பு தங்கர் பச்சானிடம் சேர்ந்து பணியாற்றியதாகவும் அதன் பின் சேரனுடன் இணையவே இல்லை என்றும் பாண்டிராஜ் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.